Home சினிமா கோலிவுட் Losliya: தமிழகத்தின் அழகு ராணியான லோஸ்லியா!

Losliya: தமிழகத்தின் அழகு ராணியான லோஸ்லியா!

922
0
Losliya Birthday Today

Losliya: தமிழகத்தின் அழகு ராணியான லோஸ்லியா! லோஸ்லியா இன்று தனது 24ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறியும் ஒரு பிரபலமாக அறிமுகமானவர் லோஸ்லியா (Losliya Mariyanesan).

கடந்த 1996 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி (Losliya Birth Date) இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் பிறந்தார். அதன் பிறகு கொழும்புவிற்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்தார்.

மாடலாக இருந்த லோஸ்லியா (Losliya) இலங்கையில் உள்ள ஒரு சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார்.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் (Bigg Boss Tamil Season 3) 2ஆவது போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் போட்டியாளர் இவர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் அன்பைப் பெற்ற லோஸ்லியாவிற்கு லோஸ்லியா ஆர்மி (Losliya Army) உருவாக்கப்பட்டது. இன்றும், லோஸ்லியா ஆர்மி இருந்து வருகிறது.

முக்கியமான சாண்டி, கவின், முகென், லோஸ்லியா கூட்டணிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். எப்போதும் பாட்டும் டான்ஸும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு கலக்கு கலக்கினார்.

கவின், லோஸ்லியா இருவரது காதல் காட்சியை பார்த்தால் காதலிக்காத இளைஞர்களுக்கு கூட காதல் வரவழைக்கும். பார்வையால் பேசிக் கொள்வது சரி, இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதலும் சரி, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் சரி எல்லாவற்றுக்கும் மேலாக கவின், லோஸ்லியா சாங், டான்ஸ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அடியே லோஸ்லியா…என்ன பாத்தியா…கண்டுக்க மாட்ரியே…உன் மனசு காஸ்ட்லியா… காதல சொன்னேனே… கருணை காட்டுனியா…சோகமா இருந்தேனே… பாவம் பாத்தியா… என்று கவின் பாடுவதும் அதற்கு லோஸ்லியா டான்ஸ் ஆடுவதும் செம்மாயா இருக்கும்.

இதே போன்று உங்க அப்பாவ பாத்தாலும் பயம்… உங்க அம்மாவ பாத்தாலும் பயம் எனக்கு எப்போ கிடைக்கும் இந்த பழம் என்று கவின் லோஸ்லியாவைப் பார்த்து பாடுவதும் அதற்கு லோஸ்லியா சின்னதாக டான்ஸ் ஸ்டெப் போடுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்…

லோஸ்லியாவின் சிரிப்புக்கும், டான்ஸூக்கும் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள். அதில், நானும் ஒருவன். இப்போது கூட அவரது டான்ஸை பார்த்தாலும் சிரித்துக் கொண்டே ரசிக்கத்தோன்றும்…

கலகலப்பாக சென்று கொண்டிருந்த கவின் – லோஸ்லியா காதல் விவகாரத்தில் லோஸ்லியாவின் பெற்றோர் இடையூறாக வர, ஒரு கட்டத்தில் இருவரும் பிரியும் நிலை வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் அவர்களது படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய லோஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங், அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் ப்ரண்ட்ஷிப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதுவும், ஹீரோயின் வாய்ப்பு அதுவும், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக சொல்லவா வேணும்…இப்படி வரவேற்பு கொடுத்து கொடுத்து லோஸ்லியா ஆர்மியினர் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றனர்.

சமீபத்தில் ஃப்ரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. ப்ரண்ட்ஷிப் படத்தைத் தொடர்ந்து ஆரி நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் படத்தில் லோஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே என்று இரு ஹீரோயினகள்.

சமீபத்தில் கலாட்டா சேனல் சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான அழகு ராணி (Beauty Queen of the year) விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் லோஸ்லியாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லோஸ்லியா ஆர்மியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் மூலமாக நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

Happy Birthday Losliya…பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோஸ்லியா…

Previous articleவங்கதேச வெற்றியை ஒரு ரன்னில் பறித்த இந்தியா
Next articleVisu: “நான் அனாதைப் பிணம்தான் – விசு” சுட்டிக்காட்டிய சிவகுமார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here