Home சினிமா கோலிவுட் Visu: “நான் அனாதைப் பிணம்தான் – விசு” சுட்டிக்காட்டிய சிவகுமார்!

Visu: “நான் அனாதைப் பிணம்தான் – விசு” சுட்டிக்காட்டிய சிவகுமார்!

5389
0
Sivakumar Says About Visu

Sivakumar; “நான் அனாதைப் பிணம்தான் – விசு” சுட்டிக்காட்டிய சிவகுமார்! வெளிநாட்டில் இருக்கும் என் குழந்தைகள் இந்தியா வரும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று விசு கூறியதாக நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், வசன கர்த்தா என்று பலதிறமைகளை கொண்ட விசு நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Visu Final Tribute

இந்த நிலையில் விசு பற்றி நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பு விசு! டைரக்டர் கே.பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்து காட்டியவர் நீங்கள்…

சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு – இரண்டு படங்கள் போதும். உங்களை உலகம் புரிந்து கொள்ள…

அரட்டை அரங்கம் – அகில உலகப் புகழை உங்களுக்கு சேர்த்தது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் படையெடுத்து குக்கிராமத்தில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்து பல பேருக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்தீர்கள்…

மக்களின் வாழ்க்கை போராட்டங்களை ரத்தமும், சதையுமாக படைப்புகளில் வெளிப்படுத்திய நீங்கள் தனி மனித வாழக்கையிலும் ஆரோக்கியத்திற்காக கடைசி நிமிடம் வரை தளராது போராடினீர்கள்…

Director Visu Passed Away

இறைவன் விதித்த மானுட வாழ்வை கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள்…

மண்ணில் பிறந்த மனிதன் ஒரு நாள் இந்த மண்ணை விட்டு பிரிந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடைசி மரியாதை செய்யக்கூட முடியாதபடி கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் பஸ் பயணம், ரயில் பயணம், விமானப் பயணம் தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்…

வெளியூர் சென்றவர்கள் வெளியூரிலும், உள்ளூரில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயும் அடைபட்டு கிடக்க 144 தடை உத்தரவு வேறு.

என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும் என் குழந்தைகள் இந்தியா திரும்பும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள். அந்தக்குறை இல்லாமல் மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு இருந்தார்கள் என்று அறிகிறேன்.

பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய். போய் வா நண்பா! அடுத்த பிறவியில் சந்திப்போம் – சிவகுமார்” .

இவ்வாறு நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleLosliya: தமிழகத்தின் அழகு ராணியான லோஸ்லியா!
Next articleஊரடங்கு உத்தரவு: மீறி வெளியில் சுத்துவோரை கைது செய்ய அரசு முடிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here