IND vs NZ 2nd Test: நியூசிலாந்து vs இந்தியா இரண்டாவது டெஸ்ட். நியூசிலாந்தை வீழ்த்த கோலி செய்ய வேண்டியது என்ன? விளையாட்டுச்செய்திகள். sports news in tamil.
IND vs NZ 2nd Test (நியூசிலாந்து vs இந்தியா இரண்டாவது டெஸ்ட்)
பிப்.27 : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒய்ட்வாஷ் செய்தது.
இதற்கு பழித்தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரில் இந்தியாவை 0-3 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்தது நியூசிலாந்து.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கி நான்கு நாளில் முடிவுக்கு வந்தது. இந்தியா படுதோல்வி அடைந்தது.
தொடர் வெற்றிகளைச் சந்தித்து வந்த இந்திய அணி நியூசிலாந்துக்கு சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டமில்லாமல் தோல்வி அடைந்தது.
கோலி பேட்டிங் சோகம்
கோலி நியூசிலாந்தில் தொடர்ந்து பேட்டிங் சொதப்பி வருகிறார். ஒருநாள் போட்டியிலும் இதே நிலைமை தான்.
முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சில் சேர்த்து வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதே நிலைமை இரண்டாவது டெஸ்டில் தொடர்ந்தால் தோல்வி தவிர வேறு ஒன்றுமில்லை.
பொறுப்பில்லாத ப்ர்த்வி ஷா
காயங்களில் இருந்து மீண்ட ப்ரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பிறகு நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்தார்.
ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதில் ப்ர்த்வி ஷா வாய்ப்பு கிடைத்தது தொடக்க ஆட்டகாரராக களம் இறங்கினார்.
மூன்று ஆட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படி விளையாடாத ப்ர்த்வி ஷா வாய்ப்பு கிடைத்தும் வீணாக்கி கொண்டார்.
முதல் டெஸ்டில் மீண்டும் அவருக்குத் தொடக்க ஆட்டகாரர் வாய்ப்பு கிடைத்து களமிறங்கி 16 & 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
புஜாரா, ஹனுமன் விஹாரி, பந்த் போன்ற வீரர்கள் முதல் போட்டியில் என்ன பணி செய்தார்கள் என்பது சந்தேகமே.
அதுவும் புஜாரா 80 பந்தில் 11 ரன் எடுத்து டெஸ்ட் ரசிகர்களை கடுப்பாக்கினார். பந்த் வழக்கம் போல வந்த வழியில் நடையைக் கட்டினார்
மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் அருமையாக ஆடியதால் அணியில் இடம் பிடித்தார் ஹனுமன் விஹாரி.
ஆனால் பயிற்சி ஆட்டம் வேறு சர்வதேச ஆட்டம் வேறு என்று புரிந்து இருப்பார். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து 22 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
திணறும் பும்ரா
மூன்று ஒரு நாள் போட்டியிலும் பும்ராவால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ரன்களையும் வாரி வழங்கினார்.
காயம் காரணமாக சில மாதங்கள் விளையாடாமல் இருந்து வந்தார். மீண்டும் நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்தார் பும்ரா.
முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 88 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
இந்திய பந்து வீச்சாளர்கள் சமியும் இதே நிலைமை தான். இந்திய பிட்ச்சில் அருமையாக பந்து வீசியவர்கள் நியூசிலாந்து மண்ணில் தடுமாறி வருகிறார்கள்.
ஆனால், இருபது ஒவர் கொண்ட ஐந்து ஆட்டத்திலும் அருமையாக பந்து வீசினார்கள் குறிப்பிடத்தக்கது.
இஷாந்த் ஷர்மா மற்றும் அஸ்வின் மட்டுமே அருமையாக வீசினார்கள். அதுவும் இஷாந்த் ஐந்து விக்கெட் வீழ்த்தியது இந்திய ரசிகர்கள் மனதில் சிறு சந்தோஷமாக அமைந்தது.
கோலி முதல் போட்டியில் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிறக்க வேண்டும், ஹனுமன் விஹாரிக்கு பதில் ஜடேஜாவை அணியில் சேர்ந்திருக்க வேண்டும்.
அஸ்வின் கூட்டணியில்லாமல் பந்துவீசியது கொஞ்சம் சிரமமாகவே இருப்பது அவரது பந்துவீச்சில் தெரிந்தது.
கோலி செய்ய வேண்டியது என்ன?
அடுத்த போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கலாம். கே.எல்.ராகுல் இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம். கடந்த வருடமாகவே நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார்.
ரோகித் இல்லாதது அணிக்கு பின்னடைவு என்பது ஒருநாள் தொடர் மற்றும் முதல் டெஸ்டில் தெரிந்தது. இந்தியா தோல்வியும் அடைந்தது.
நியூசிலாந்து அணியை 225 ரன்களுக்கு 8 விக்கெட் வீழ்த்திய இந்திய அணி டைல் எண்டர்களில் ரன்கள் சேர்க்க விட்டனர்.
நியூசிலாந்தும் 348 ரன்கள் குவித்தது. அதுவே இந்தியத் தோல்விக்கு காரணம் என்று கூட சொல்லலாம். ரிவ்யூவை கோலி கேட்கும் போது பொறுமை கொள்ளலாம்.
ஆக்ரோஷமான கோலியை நியூசிலாந்தில் காண முடியவில்லை. தோனியிடம் இருந்து மாறுபட்ட கேப்டன்சியை கொண்ட கோலி நியூசிலாந்தில் தோல்வி அடைவது ரசிகர்களிடம் வருத்தமாகவே உள்ளது.
இரண்டாவது டெஸ்டில் மாற்றம் தந்தால் மட்டுமே வெற்றியை நியூசிலாந்திடம் பறிக்க முடியும்.