INDvsNZ 2nd Test; இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது, அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவை நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி INDvsNZ 2nd Test இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது.
இந்தியா பேட்டிங்
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்திவி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இறங்கினார்கள்.
அதிரடியாக ஆடிய பிரத்திவி ஷா 54 ரன்கள் எடுத்து ஜேமிஸ்சன் பந்தில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
விராத் கோலி 3 ரன்கள், அஜின்கியா ரகானே 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்கள். புஜாரா மட்டும் நிலைத்து நின்று ஆடி 54 ரன்கள் சேர்த்தார்.
அவருக்கு உறுதுணையாக ஆடிய ஹனுமன் விகாரி 55 ரன்கள் சேர்த்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது.
194 ரண்களுக்கு 4 விக்கெட் மட்டுமே இழந்த இந்திய அணி அடுத்த 13 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.
கடைசி விக்கெட்டில் பும்ரா மற்றும் சமி ஆறுதலளிக்கும் ஆட்டத்தை ஆடினார்கள். முகமது சமி டிரென்ட் போல்ட் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசினார்.
மிரட்டிய பிளாக் கேப்ஸ்
இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூஸிலாந்து தரப்பில் ஜேமிஸ்சன் 5 விக்கெட், சவுத்தீ மற்றும் டிரென்ட் போல்ட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லதாம் மற்றும் பிளண்டல் இந்திய பவுலர்களை சோதித்தனர்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. டாம் லதாம் 27 ரன்களிலும் பிளண்டல் 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர்
தொடர்ந்து சொதப்பும் கோலி
நியூஸிலாந்தில் டி20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி ரன் சேர்க்க திணறி வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறி வருகிறார்.
கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் இந்த போட்டியில் 7 ரன்களில் வெளியேறினார். அணியில் ரிஷப் பந்த் என்ன பேட்டிங் செய்கிறார் என்பது அவருக்கே புரியாத புதிராக உள்ளது.
அவருக்கு பதில் விருத்திமான் சஹா ஆடும் 11 லில் சேர்ந்திருக்கலாம்.
அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விக்கெட் சரிந்த நிலையில் களமிறங்கினார்.
அவரும் சற்று பொறுமையாக ஆடி இருக்கலாம் அதை அவர் செய்ய தவறினார். இந்திய அணி 300 ரன்கள் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது 242 ரன்களுக்கு சுருட்டினார்கள் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள்.