கடந்த மார்ச் 7ம் தேதி தொடங்கிய ‘ரோடு சேப்டி வேர்ல்டு தொடர்’ போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா என ஐந்து அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது.
முதல் ஆட்டம்
முதல் போட்டியில் இந்திய லிஜெண்ட் அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணிகளும் மோதின.
சேவக் அதிரடியால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
மார்ச் 8 ஆம் தேதி நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா இலங்கை அணியும் மோதின. இதில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
நேற்று மும்பையில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய லிஜெண்ட் அணியும் இலங்கை அணியும் மோதின.
டாஸ் வென்ற டெண்டுல்கர்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இலங்கை அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கையில் அதிகபட்சமாக தில்ஷன் 23, கழுவிதர்னா 21, துஷாரா 10, கப்புகெதர 23, சனாயகா 19, மகரூப் 10 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தரப்பில் முனாப் பட்டேல் 4 விக்கெட்டும், இர்பான் பதான், ஜாகிர் கான், சஞ்சய் பங்கார், கோனி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
139 ரன்கள் இலக்கு
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரரான ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இறங்கினார்கள்.
இந்திய ரசிகர்கள் முதல் போட்டியை போல இந்தப் போட்டியிலும் தொடக்க ஜோடி ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருந்தனர்.
சமந்தா பாஸ் வீசிய முதல் பந்தை சேவாக் தூக்கி அடிக்க அந்த கேட்சை அட்டபட்டு தவறவிட்டார். ஆனால் டெண்டுல்கரை முதல் ஓவரின் 3-வது பந்தில் சமந்தா வீழ்த்தினார்.
சேவாக் 3, யுவராஜ் சிங் 1, மற்றும் சஞ்சய் பங்கர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
முகமது கைப் மற்றும் இர்பான் பதான் இருவரும் கூட்டணி அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 45 ரன்கள் எடுத்த நிலையில் முகமது கைப் தனது விக்கெட்டை இழந்தார்.
இந்தியா வெற்றி
இறுதியில் இந்திய அணிக்கு 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது 18-வது ஓவரை மகரூப் பந்து வீசினார்.
அந்த ஓவரில் 3 சிக்சர்கள் நோ பாலுடன் ஒரு பவுண்டரி என சேர்த்து மொத்தம் 26 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள் இர்பான் பதான் மற்றும் கோனி.
18.4 ஓவர்களில் இந்தியா 139 ரன்கள் எடுத்து இலங்கை அணி 65 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவில் அதிகபட்சமாக 29 பந்துகளில் 50 ரன்னை கடந்த இர்பான் பதான் 31 பந்துகளில் 57 ரன்னும், முகமது கைப் 45 ரன்களும் , கோனி 11 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் சமந்தா வாஸ் 2 விக்கெட்டும், ஹெராத் மற்றும் சனாயாக தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஏமாற்றம்
இந்தியா ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கப்பட்ட சச்சின் மற்றும் சேவாக் ஏமாற்றம் தந்தனர்.
16 வது ஓவர்கள் வரைஆட்டம் இலங்கை அணி கையில் இருந்தது. மகருப் வீசிய 18 வது ஓவர்தான் திருப்பு முனையாக அமைந்தது.
ஆட்டநாயகன்
ஆட்டநாயகன் விருதை அதிரடியாக ஆடி இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்ற இர்பான் பதான் வாங்கினார்.