கொரோனா விளைவு; 2020ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்குமா இந்தியா
ஜப்பான் பிரதமர் திட்டமிட்டபடி 2020ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமெங்கும் விளையாட்டு போட்டிகள், பார்ட்டிகள் மற்றும் திரையரங்குகள் முதலியை ரத்து செய்யப்பட்டுள்ளன.
வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே இந்தியா சார்பாக பங்கேற்க இருக்கும் ஒலிம்பிக் குழுவின் பயணங்களை தற்காலிமாக தடை செய்தது இந்திய அரசு.
கடந்த வாரம் கிரீஸில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காமலே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.