Home விளையாட்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் கூறும் பாகிஸ்தான் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் கூறும் பாகிஸ்தான் வீரர்

0
234

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் கூறும் பாகிஸ்தான் வீரர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களுடைய தனி ரெகார்டுக்காக விளையாடுபவர்கள். ஆனால் பாகிஸ்தான் அப்படி இல்லை.

நாங்கள் வெறும் 30-40 ரன்கள் அடித்தாலும் அது அணியின் வெற்றிக்கு என்னும் எண்ணத்தோடு அடிப்போம். ஆனால் இந்தியர்கள் சதம் அடித்தாலும் செல்ஃபிஷ் ஆட்டம் ஆடுவார்கள்.

தங்களுடைய சதத்திலேயே கவனமாக இருப்பார்கள் அணியின் வெற்றியை விட என்று கிரிக்கெட் வர்ணணையாளர் ரமீஷ் ராஜாவுடன் யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்தார்.

இதுவே இந்திய வீரர்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்று கூறினார்.பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய பேட்ஸ்மென்களே ஆதிக்கம் செலுத்துவர் என்று இன்ஷமாம் கூறினார்.

மேலும், 1992 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்ற தருணம் தொடர்பாக நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

இன்ஷமாம் உல் ஹக் 1991 முதல் 2007 வரை விளையாடிய இவர் 20 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே பாகிஸ்தான் வீரர் இன்ஷாம் உல் ஹக் தான்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here