Home விளையாட்டு ஐபிஎல் வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி ஒத்திவைப்பு

ஐபிஎல் வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி ஒத்திவைப்பு

252
0

கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல்தான் ஐபிஎல் போட்டி பற்றியே யோசிக்க முடியும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த உலகமே கொரோனா வைரஸ் காரணமாக பயந்து அஞ்சு வருகிறார்கள்.

பல நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இந்திய அரசு 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது. மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு சமூக விலகலை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகிற 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவித்தார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதால் தற்போது ஐபிஎல் போட்டியில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா என்பது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

மத்திய அரசு மற்றும் பிசிசிஐக்கு இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முன்னதாக “ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து நடத்த வாய்ப்புகள் இருப்பதாக” கூறியிருந்தார்.

மேலும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என தகவலும் வெளியாகின.

தற்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரஜு ஐபிஎல் குறித்து பேசுகையில் :

“தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் நிலைமைக்கேற்ப புதிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டுவரும்.

பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளைப் போல் பார்க்கின்றன. ஆனால் தற்போது நாம் விளையாட்டை மட்டும் பார்க்கவில்லை ஒவ்வொரு குடிமகன்களின் பாதுகாப்பையும் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்

என்று கூறியுள்ளார்

கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க உள்ளது.

அதன் பிறகு கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு இந்தியா திரும்பினால் தான் ஐபிஎல் குறித்து யோசிக்க முடியும் என பல விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் முக்கியமே வெளிநாட்டு வீரர்கள் தான். ஆகையால் ஐபிஎல் நடக்கும் தேதி குறிப்பிடுவதில் வெளிநாட்டு வீரர்களும் வருகை தரவேண்டும்.

அவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம்.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து, சகஜமான நிலைக்கு திரும்பிய பிறகுதான் ஐபிஎல் நடக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here