ஐபிஎல் போட்டி: ஆரம்பமே அசத்தல், டாஸ் வென்றார் தோனி
ஐபிஎல் 2019 இன்று கோலாகல நிகழ்ச்சிகள் இல்லாமல் ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் அசத்தலாக துவங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றார். முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளார்.
எதிர்த்து விளையாடும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட சிஎஸ்கே-வை வென்றது இல்லை.
அதேபோல் மூன்று முறை இறுதிபோட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே இந்த ஐபிஎல் சீசனில் வெற்றியுடன் யார் துவங்குவது என கடும் போட்டி நிலவும்.
மேலும் ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றும் முனைப்பில் கோலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டியை நேரலையில் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..