ஐபிஎல் போட்டியில் ஒரே அணிக்காக விளையாடிய வீரர்கள் மற்றும் அதிக அணிக்காக விளையாடிய வீரர்களில் விராட் கோலி மற்றும் ஆரோன் பின்ச் உள்ளனர்.
ஐபிஎல் போட்டி
2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் 13ஆவது சீசனை எட்டியுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடி வருகிறது.
சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், பெங்களூரு தற்பொழுது உள்ள எட்டு அணிகள் ஆகும்.
கொச்சி மற்றும் புனே
2011ஆம் ஆண்டு மட்டும் 10 அணிகள் விளையாடியது அதில் கொச்சி மற்றும் புனே அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது..
பின்பு மீண்டும் 8 அணிகளாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் தடைசெய்யப்பட்டு விளையாடாமல் இருந்தது.
குஜராத் மற்றும் புனே
இதனால் குஜராத் மற்றும் புனே அணி சேர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி ஐபிஎல் போட்டிக்கு திரும்ப குஜராத் மற்றும் புனே அணியை நீக்கியது ஐபிஎல் நிர்வாகம்.
இதுவரை 13 சீசன்களில் விளையாடியுள்ள 8 அணிகளிலும் ஒரு சில வீரரை தவிர மற்ற எல்லாரும் அணி மாறி விளையாடி உள்ளார்கள்.
நம்முடைய சென்னையின் தல தோனி மற்றும் ரெய்னா கூட வேறுவேறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்கள்.
சச்சின் விளையாடிய நான்கு சீசன் களிலும் மும்பை அணிக்காக மட்டும் விளையாடினார்.
ஆனால் 13 சீசன்கள் விளையாடிய வீரர்கள் என்றால் இருவர் மட்டுமே
1. வீராத் கோலி
2008ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாம் இந்திய கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
அனில் கும்பளே,ராகுல் டிராவிட், டேனியல் வெட்டோரி போன்றவர்கள் தலைமையின் கீழ் விளையாடிய வீராட்கோலி. தற்போது பெங்களூர் அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார்.
இந்தியாவில் பல வெற்றிகளை குவித்து வரும் விராட் கோலி பெங்களூர் அணிக்காக கோப்பையை வாங்கி தர முடியவில்லை என்பதே சோகம்.
2. லசித் மலிங்கா
2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை வீரருமான வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடி வருகிறார்.
இவர் இலங்கை அணி t20 கேப்டனாகவும் இருந்துவருகிறார். கடந்த முறை மும்பை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
மும்பை அணி பலமுறை வெற்றி பெற இவரது பந்துவீச்சு உதவியிருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடி உள்ளார்.
இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சில போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார்
மார்ஷ், தோனி, ரோகித், ஹர்பஜன்
ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் தான் விளையாடிய ஐபிஎல் போட்டியில் 2008-2017 ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார்.
சென்னை அணி 2016-2017 ஆண்டுகளில் தடை செய்யப்படுவதால் தோனி மற்றும் வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் மூன்று சீசன்களில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 2008 2018 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல்லில் அதிக அணிகளில் விளையாடிய வீரர்கள்
1. ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ஐபிஎல் போட்டியில் அதிக அணிகள் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 7 அணிகளில் விளையாடி இருக்கிறார்.
இவர் விளையாடிய அணிகள் புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2. தினேஷ் கார்த்திக்
இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 6 அணிகளில் விளையாடி உள்ளார்.
இவர் விளையாடிய அணிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஆகும்.
3. திசாரா பெரேரா
இலங்கையின் ஆல் ரவுண்டர் ஆன அதிரடி பேட்ஸ்மேன் திசாரா பெரேரா இதுவரை 6 அணிகள் விளையாடி உள்ளார்.
அவர் விளையாடிய அணிகள் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே ரைசிங் ஜெயின்ஸ், கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆகும்.
4. பார்த்திவ் படேல்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பர்த்திவ் படேல் இதுவரை ஐபிஎல் போட்டியில் 6 அணிகளில் விளையாடி உள்ளார்.
இவர் விளையாடிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கேர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜஸ் போன்ற அடிகள் விளையாடி உள்ளார்.
5. யுவராஜ் சிங்
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ஐபிஎல் 6 அணிகளில் விளையாடி உள்ளார்.
இதுவரை அவர் விளையாடிய அணிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஆகும்