Home Latest News Tamil ஐ‌பி‌எல் போட்டி: கோலியும், தோனியும் மோதல்

ஐ‌பி‌எல் போட்டி: கோலியும், தோனியும் மோதல்

547
0
ஐ‌பி‌எல் போட்டி

ஐ‌பி‌எல் போட்டி: கோலியும், தோனியும் மோதல்

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ‌பி‌எல் போட்டி அட்டவணைகள் முதல் 2 வாரத்திற்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் வருவதால் முதல் 2 வாரம் மட்டுமே போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் தேர்தல் தேதியைப் பொருத்து அறிவிக்கப்படும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கிய ஐ‌பி‌எல் போட்டிகள் உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே லீக்போட்டி ஆகும்.

அட்டவணை வெளியிடப்பட்டதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலெஞ்ஜெர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த வருடம் சென்னை மைதானத்தில் ஒரு போட்டி மட்டுமே நடந்தது, இருந்தாலும் சென்னை அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது.

மீதமுள்ள போட்டிகள் தேர்தல் தேதி அறிவித்த பிறகே அறிவிக்கப்படுவதாக ஐ‌பி‌எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருடம் உள்ளூர் வெளியூர் அணி போட்டிகள் என நடத்துவது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடப்பதால் போதிய பாதுகாப்பு கொடுப்பது கடினம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here