1996 உலககோப்பை: கிரிக்கெட்டை மற்ற நாடுகள் ஒரு விளையாட்டாக பார்கிறார்கள், ஆனால் இந்தியாவில் மட்டுமே அதை உணர்வாக பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் ஆட்டத்தை பார்க்கும் போது தானே விளையாடுகிறோம் என்ற எண்ணத்தில் பார்க்கிறார்கள்.
இந்தியா தோல்வி அடைந்தால் வீரர்கள் திட்டி தீர்த்து விடுவார்கள். வெற்றி பெற்றால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.
ஒவ்வோரு இந்தியனும் கிரிக்கெட் என்ற வார்த்தை கேட்காமல் இருக்க மாட்டான். இந்திய இளைஞர்கள் ஒருமுறையாவது வாழ்க்கையில் மட்டையை தொடமால் இருந்திருக்க மாட்டார்கள்.
கிரிக்கெட் வீரர்காக உயிரை விடும் அளவிற்கு ரசிகர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.
1996 உலககோப்பை
1996-ஆம் ஆண்டு உலககோப்பை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தியது.
இந்தியா நல்ல வலுவான அணியாக அசாருதின் தலைமை , சச்சின் டெண்டுல்கர் துணை தலைமையிலும் களம் கண்டது.
இந்தியாவின் லீக் போட்டிகள்
இந்த முறை உலககோப்பையில் 12 அணிகள் பங்குபெற்றது. முதல் போட்டியில் இந்தியா, சச்சின் சதத்துடன் கென்யா அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இரண்டவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த முறை இந்தியா, சச்சினின் அரைசதத்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
மூன்றாவது போட்டி அன்றைய அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் சச்சின் 90 ரன்கள் அடித்தாலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
அசுர பலமான சச்சின்
நான்காவது போட்டி இலங்கை அணியிடம் மோதியது. சச்சின் மீண்டும் சதம் அடித்து 137 ரன்கள் குவித்தும் 6 விக்கெட் வித்தியாசத்தில் உலககோப்பையில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
இந்த உலககோப்பையில் சச்சின் டெண்டுல்கர் தன் முழு திறமையையும் காட்டி உலகத்துக்கே நான் தான் கிரிக்கெட்டுக்கு மாஸ்டர் பிளாஸ்டர் என்று நிரூப்பித்தார்.
கடைசி லீக் போட்டி இதில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி உலககோப்பை அரையிறுதிக்கு செல்ல முடியும் என்கிற கட்டாயம். ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் வெளியேற்றம்
இந்த போட்டியில் சச்சின் 3 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். ஆனால் அவரது நீண்ட கால நண்பர் வினோத் காம்ளி சதம் அடித்து, ஜிம்பாப்வே அணியை 40 ரன் வித்தியாசத்தில் வென்றது.
கால்யிறுதி போட்டியில் போட்டியை நடத்துகின்ற பாகிஸ்தான் மற்றும இந்தியா பெங்களூர்வில் மோதின. 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று வரை பாகிஸ்தான் உலககோப்பையில் இந்தியாவை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடன் கார்டன்
அரையிறுதி போட்டி மார்ச் 13-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் முழுவதும ரசிகர்கள் கூட்டம். இலங்கையை இந்திய அணி வீழ்த்திவிடும் என நம்பிக்கையில் ஆரவாரம் செய்கிறார்கள்.
இந்தியாவில் ஆட்டத்தை மணி அடித்து துவங்கி வைக்கும் நடைமுறை இந்த மைதானத்தில் மட்டுமே உள்ளது.
1864-ஆம் ஆண்டு துவங்கிய இந்த மைதானம் 156 ஆண்டு பழமை வாய்ந்தது. 66000 ரசிகர்கள் அமர கூடியது.
இதுவரை நடக்காத சம்பவம்
இதுவரை சர்வேதச கிரிக்கெட்டில் நடக்காத ஒரு சம்பவம் கொல்கத்தா மைதானத்தில் அரங்கேறியது. ரசிகர்கள் கூட்டம் செய்த அராஜகத்தால் ஒரு அணி வெற்றி பெற்றது.
ஏற்கனவே இந்தியா இந்த உலககோப்பையில் இலங்கையிடம் லீக் போட்டியில் தோற்று இருந்தது. ஆனால் உலககோப்பையில் ஒரு அணியிடம் இரண்டு முறை இந்திய அணி தோற்றது இல்லை
இலங்கை பேட்டிங்
அசாருதின் டாஸ் வென்று இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தார். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
சில்வா 66, மகனமா 58, ரனதுங்கா 32, திலகரத்தனே 32, வாஸ் 23 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஶ்ரீநாத் 3 விக்கெட்டும், சச்சின் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
252 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி, கொல்கத்தா பிச்சு ஒன்றும் கடினமானது கிடையாது. சேஸிங் செய்ய கூடியது தான். இந்தியாவிற்கு நன்றாக ஒத்துழைக்க கூடிய மைதானம்.
இந்தியா நல்ல தொடக்கம்
சச்சினும் சித்துவும் களமிறங்கினார்கள். இந்தியா 8 ரன்கள் இருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த மஞ்சரேக்கருடன் ஜோடி சேர்ந்த சச்சின் 98 ரன்கள் இருந்த போது பிரிந்தது.
இந்திய வெற்றி நம்பிக்கை இதுவரை ரசிகர்கள் மத்தியில் ஆணிதனமாக ஓடியது. இன்னும் 160 ரன்கள் தான் கைவசம் 8 விக்கெட் இருக்கின்றது என்று.
நடுவரிசையை காலி செய்த சூர்யா
ஆனால் இலங்கை நம்பிக்கை தளரவில்லை, சச்சின் விக்கெட்டை எடுத்த தெம்பில் பந்து வீசுகிறார் ஜெயசூர்யா. இந்திய விக்கெட்டுகள் அருவி போல கொட்டத் தொடங்கியது
.
அடுத்த 22 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தது. இந்திய நடுவரிசையை ஜெயசூர்யா கலங்கடித்தார். வினோத் காம்ளி மற்றும் ஶ்ரீநாத் களத்தில் உள்ளார்
கடுப்பான ரசிகர்கள்
இந்தியா ஒவ்வொரு விக்கெட்டை இழக்க இழக்க ரசிகர்கள் பொறுமையை இழக்க தொடங்கினார்கள்.
பாட்டில்கள், கேன்கள், பிளாஸ்டிக் பைகள் என கையில் கிடைக்கும் அனைத்தையும் மைதானத்தின் உள்ள தூக்கி எறிய ஆரம்பித்தார்கள்.
இதை கண்ட ரனதுங்கா நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மீண்டும் ஆட்டத்தை விளையாட மறுக்கிறார். அன்றைய போட்டி நடுவராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிளைவ் லையோட் இருந்தார்.
இலங்கை வெற்றி
எல்ல விதத்திலும் இலங்கை அணியை விட இந்திய ரன் ரேட் குறைவாக இருந்தது. இதனால் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் நடந்தது இல்லை.
வினோத் காம்ளி கண்ணில் தாரை தாரையாக நீர் வடிகிறது, அழுதபடிய மைதானத்தை விட்டு அறைக்கு நடையைக்கட்டுகிறார்.
இந்நியாவில் சச்சின் 65 ரன்களும், மஞ்சரேக்கர் 25 ரனக்ள் எடுத்து, இந்திய அணியில் சொல்லும்படி ரன்கள் அடித்தார்கள். இலங்கை தரப்பில் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், டி செல்வா 1 விக்கெட்டும் விழ்த்தினார்கள்.
கட்டுபடுத்திய காவலர்கள்
மீண்டும் ரசிகர்கள் நெருப்பை பற்ற வைத்து விடுகிறார்கள். சிறிது நேரம் பரபரப்பு காணப்படுகிறது. காவலர்கள் அங்கு சென்று ரசிகர்களை கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் இலங்கை அணிக்கு அசம்பாவிதம் எதுவும நடக்கவில்லை. அதில் ரசிகர் ஒருவர் “இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் நாங்கள் வருந்துகிறோம்” என்றார்.
மேற்கொண்டு இதுபோல நடக்காமல் இருக்க பாதுகாப்பை இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் இந்தியா அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. அன்று இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
மீண்டும் 2007 உலககோப்பையில் இந்திய அணி லீக் போட்டியில் வெளியேறியதற்கு யுவராஜ் மற்றும் தோனியின் வீடுகள் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.