Home விளையாட்டு #MIvsRR ராஜஸ்தான் ராயல்ஸை கிழித்துதொங்கவிடும் மும்பை

#MIvsRR ராஜஸ்தான் ராயல்ஸை கிழித்துதொங்கவிடும் மும்பை

419
0
#MIvsRR

#MIvsRR ராஜஸ்தான் ராயல்ஸை கிழித்துதொங்கவிடும் மும்பை

ஐபில் 2019 சீசனில் எல்லாத் திறமையும் இருந்தும் தோல்வியைச் சந்தித்து வரும் அணி ராஜஸ்தான் ராயல்ஸ்.

கடந்த போட்டியில் சென்னையிடம் கடைசி பாலில் தோல்வியைத் தழுவியது. இன்றைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிக்கொண்டு இருக்கிறது.

முதலில் பேட் செய்துகொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது.

10.5-தாவது ஓவரில் 47 ரன்களில் ரோகித் சர்மா அவுட் ஆகியுள்ளார். சதம் அடிக்காமல் அவரது விக்கெட் பறிபோயுள்ளது.

தொடர்ந்து மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

டிகாக் 50 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். சூரிய குமார் யாதவ் 9 பந்துகளில் 16 ரன்கள் அடித்துள்ளார். மும்பை இதே வேகத்தில் ஆடினால் 200 ரன்களைக் கடக்க வாய்ப்பு உள்ளது.

ஜோப்ரா அர்ச்சர் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி 2 ஓவருக்கு 17 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

மும்பை அணியின் ஆக்ரோசத்தை சமாளித்து ரஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெறுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Previous article#DCvsKKR கொல்கத்தாவை தவிடுபொடியாக்கிய தவான்
Next article#MIvsRR மும்பை வீரரின் கையை உடைத்து த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here