தோனி இதே நாள் ஏப்ரல் 5 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 ரன்கள் எடுத்து தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
அன்று தோனி என்றால் யார் என்றே தெரியாது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான தோனி தனது முதல் ஆட்டத்தில் ரன் அவுட் மூலம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அந்தத் தொடர் அவருக்கு சற்று சோகமாகவே முடிந்தது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான 6 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் தோனியை தேர்வு செய்தனர்.
அந்த ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இந்தியரின் கீப்பராக இருந்தார்கள்.
இருந்தும் அன்றைய கேப்டன் கங்குலி தோனியை கீப்பராக தேர்வு செய்தார் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் இடம் கிடைக்கவில்லை.
முதல் ஆட்டத்தில் மூன்று ரன்களுடன் வெளியேறிய தோனி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி ஏப்ரல் 5 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி பேட்டிங்கை தேர்வு செய்தார். சச்சினும் சேவாக்கும் களமிறங்கினார்கள்.
சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களில் வெளியேற, இப்பொழுது 6 வது இடத்தில் இறங்கும் தோனி அன்று மூன்றாவது வீரராக இறங்க கங்குலி வாய்ப்பு வழங்கினார்.
இந்த வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் தோனி.
சேவாக் உடன் கூட்டணி அமைத்த தோனி நிதானமாக ஆடினார். இருவரும் சேர்ந்து 96 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி 122 ரன்கள் இருந்தபோது சேவாக் வெளியேறினர். அடுத்து வந்த கங்குலியும் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்திய அணி 140 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது. அடுத்ததாக களமிறங்கினார் இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட்.
தோனியும் ராகுல் டிராவிட் இணைந்து பாகிஸ்தானே சோதித்து எடுத்தார்கள்.
தோனி 88 பந்துகளில் தனது ஒருநாள் போட்டியின் முதல் சதத்தை எடுத்தார். இந்திய விக்கெட் கீப்பர் களில் சதம் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார்.
இதற்கு முன்னால் ராகுல் டிராவிட் எடுத்திருந்தார். அவருடன் கூட்டணி அமைத்து தோனியின் சதம் எடுத்தார்.
தனது ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் அதுவும் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் எடுத்து அசத்தினார் தோனி.
ராகுல் டிராவிட் தோனியும் இணைந்து 149 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 279 இருந்தபோது தோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தோனி 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்திருந்தார் 15 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் இதில் அடங்கும்.
இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது.
சேவாக் 74 ரன்களும், டிராவிட் 52 ரன்களும் எடுத்தனர் பாகிஸ்தான் தரப்பில் நவீட் உள் ஹாசன் 3 விக்கெட்டும் அர்ஷத் கான் மற்றும் ஹபீஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடி இந்திய அணி பந்துவீச்சை சோதித்தார்கள்.
இறுதியில் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 298 ரன்கள் எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானில் அதிகபட்சமாக அப்துல் ரசாக் 88 ரன்களும், முகமது யூசப் 71 ரன்களும், கமரன் அக்மல் 41 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா 4 விக்கெட்டும் யுவராஜ்சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
148 ரன்கள் எடுத்த மகேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருதை முதல் முறையாக வென்றார்.
2005 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் தொடரில் 6 போட்டிகளில் 4 – 2 என்ற கணக்கில் பாகிஸ்தான் இந்திய மண்ணில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.