எம்எஸ் தோனி; நான் பயப்படுவேன், பதற்றமடைவேங்க நானும் மனுசன் தான். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி மைதானத்தில் அவரின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் MFORE என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இது விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மன உறுதியோடு, மன அழுத்தமின்றி விளையாட வழிவகை செய்தது.
இதில் பேசிய மகேந்திர சிங் தோனி, நமக்கு மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக் கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இதனை நாம் மன நோய் என்று சொல்லுவோம்.
நான் கிரிக்கெட்டில் களமிறங்கும் போது ஐந்து முதல் பத்து பந்துகளை எதிர்கொள்ள பயப்படுவேன். பதற்றம் அதிகமாக இருக்கும், கொஞ்சம் பயம் இருக்கும், சிலருக்கு இது அதிகமாகவே இருக்கும்.
இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல அதிகளவு தயக்கம் இருக்கும். இதைக் கூற இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
நம்முடைய மன அழுத்தத்தை சமன் செய்யக் கூடிய பயிற்சியாளர் 15நாள் நம்மோடு இருக்கும் பட்சத்தில் நாம் அந்த பிரச்சனையை அவரிடம் கூற முடியும்.
என்னைப் பொறுத்து வாழ்க்கையில் மன தெளிவுடன் இருப்பது மிகவும் முக்கியமானது என்று எம்எஸ் தோனி தெரிவித்தார்.