தோனியின் சொகுசு பைக்குகளின் அணிவகுப்பு வீடியோ வெளியானது; பார்ப்பதற்கு கண்காட்சி போல் உள்ளது. இந்திய முன்னாள் கேப்டன் தோனிக்கு பைக்குகள் மிகவும் பிடிக்கும்.
கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பாத தோனி ஓய்வு பற்றியும் எந்த வித தகவலும் இது வரை தெரிவிக்கவில்லை.
தோனிக்கு உயர் ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிகவும் பிடிக்கும். அதை அதிகமாக வாங்கி வீட்டில் நிறைக்கும் பழக்கம் கொண்டவர்.
ஆனால் அவரிடம் இருக்கும் அனைத்து பைக் மற்றும் கார்களை நம்மால் பார்க்க இயலாது. எந்த வித மீடியா உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை.
எப்படியோ தோனி வீட்டில் இருக்கும் அனைத்து ரக வாகனங்களும் இரண்டு மாடிகளில் வரிசையாக பார்க் செய்வதை பார்த்தால் கண்காட்சி போல இருக்கிறது.
பழமையான மாடல் BSA பைக், Harley-Davidson மற்றும் பிற மடல்களும் உள்ளது. மேலும் Yamaha RD 350s and RX100s, Kawasaki Ninja H2 மற்றும் Confederate X132 Hellcat.
ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னாள் ராஞ்சி மைதானத்தில் விளையாட கவாஸ்கி நிஞ்சா பைக் மூலம் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Nissan 1 Ton truck and a Rolls Royce Silver Shadow Series I ஆகிய கார்களும் Jeep Grand Cherokee Trackhawk என்னும் ஜீப் இந்தியாவில் இவரிடம் மட்டும் தான் இருக்கிறது.
மேலே இருக்கும் புகைப்படங்களையும் எம்எஸ் தோனி இருக்கும் இடம் அனைத்தையும் ஒப்பிடுகையில் இது உண்மையான காணொளி என்பது தெரிகிறது.
அவ்வப்போது அவரின் செல்ல மகள் சாக்ஸியுடன் பைக்கில் வீட்டின் உள்ளயே ஒரு ரவுண்ட் அடிப்பார்.