நீண்ட காலத்திற்கு அசைக்க முடியாத சாதனை அதைப் படைத்த மர்ம மனிதன் எனும் இலங்கையின் முத்தையா முரளிதரன்(Muttiah Muralitharan) பிறந்த தினம் இன்று.
இலங்கையிலுள்ள கண்டியில் ஏப்ரல் 14ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு சின்னசாமி முத்தையா மற்றும் லட்சுமி முரளிதரன் அவர்களுக்கு பிறந்தவர்தான் முத்தையா முரளிதரன்.
இலங்கை தமிழரான முரளிதரன் ஆகஸ்ட் மாதம் 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
ஆகஸ்ட் மாதம் 1993 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி அறிமுகமாகி நான்கு வருடம் விளையாடினார்.
Muttiah muralitharan ஐபிஎல் போட்டியில் சென்னை, பெங்களூரு, கொச்சி அணிக்காக விளையாடி உள்ளார்.
இதுவரை 133 டெஸ்ட் போட்டியில் விளையாடி 44039 பந்துகள் வீசி 800 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
380 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 18811 பந்துகள் வீசி 534 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஒரு இன்னிங்சில் டெஸ்ட் போட்டிகளில் 67 முறை 5 விக்கெட்டுக்கு மேல் ஒருநாள் போட்டியில் 10 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கு 22 முறை 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 9 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 7 விக்கெட் எடுத்துள்ளார்.
ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டிஎன்பிஎல் திருவள்ளுவர் வீரன் அணிகளுக்கு பயிற்சியாளராகும் செயல்பட்டுள்ளார்.
2014, 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
முரளிதரனின் சாதனைகள்
- டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்.
- ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்.
- டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போன்ற சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்.
- டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வீரர்.
- அதிக முதல் டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய வீரர்.
- அதிவேகமாக 350, 400, 450, 500, 550, 600, 650, 700, 750, 800 விக்கெட்டுகளை குறைந்த போட்டியில் எடுத்த வீரர்.
- தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மேல் வீழ்த்தியுள்ளார். அதுவும் இரண்டு முறை எடுத்துள்ளார்.
- டெஸ்ட் அந்தஸ்து பெற்று விளையாடும் அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
- டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இருமுறை 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவருடன் இங்கிலாந்தில் ஜிம் லாக்கரூம் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
- அதிக முறை தொடர் நாயகன் விருதை டெஸ்ட் போட்டியில் பெற்றுள்ளார்.
- ஒரு மைதானத்தில் தனிநபராக 100 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி உள்ளார். அதுவும் இலங்கையில் உள்ள மூன்று மைதானங்களிலும் தனித்தனியாக 100 விக்கெட்டுக்கு மேல் எழுதியுள்ளார்.
- 2000, 2001, 2006 ஆம் ஆண்டு ஒரு வருடத்தில் 75 விக்கெட்டுகள் மேல் வீழ்த்திய வீரர்.
- சர்வதேச போட்டிகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராவார்(77).
- சர்வதேச அனைத்துவித போட்டிகளில் அதிக முறை ரன் எடுக்காமல் அவுட்டான வீரர் ஆவார் (59).
- சர்வதேச போட்டிகளில் அதிக முறை பந்து வீசிய வீரரும் ஆவார் (63132).
- சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராவர் (493).