Home விளையாட்டு sachin birthday: என்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை – சச்சின்!

sachin birthday: என்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை – சச்சின்!

இந்த நல்ல மனமும், குணமும் தான் அவரை என்றும் உயரத்தில் வைத்துள்ளது.நாளை இந்நேரம் வலைத்தளம் முழுவதும் அவரின் புகைப்படங்கள் உலாவரும் குழந்தை சச்சின் முதல் தற்போது உள்ள சச்சின் வரை.

317
0
sachin birthday

sachin birthday: சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின்  உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர், கடந்த 2013 ஆம் ஆண்டு அணைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றும் ரசிகர்களின் பேரன்பு அவரை சூழ்ந்தே உள்ளது.

வருகின்ற வெள்ளிக்கிழமை அவருக்கு 47 வயது பூர்த்தி ஆகிறது . ( No birthday celebrations on April 24 – Sachin) வருடா வருடம்  அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அவரின் ரசிகர்கள் பல நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர் ஆனால் சச்சினோ இந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட போவதில்லை என்று அறிவித்து விட்டார் .

sachin birthday தவிர்த்த காரணம்:

“உலகமே கொரோனாவால் தத்தளித்து வருகிறது, எண்ணற்ற மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும் இந்த நிலையை முன்நின்று போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர், காவல்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல நிஜ நாயகர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மிகப்பெரிய சேவை செய்து வருகின்றனர்!

எனவே நான் அத்தகைய கொரோனா போராளிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக என்னுடைய பிறந்தநாளை கொண்டாடாமல் அவர்களுக்காக மனமார இறைவனை துதிக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நல்ல மனமும், குணமும் தான் அவரை என்றும் உயரத்தில் வைத்துள்ளது.நாளை இந்நேரம் வலைத்தளம் முழுவதும் அவரின் புகைப்படங்கள் உலாவரும் குழந்தை சச்சின் முதல் தற்போது உள்ள சச்சின் வரை.

சச்சின் நீடூழி வாழ்க பல்லாண்டு! 

சா.ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here