கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஜப்பான் அரசு அறிவித்துள்ளது
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் ஜப்பானில் உள்ள டோக்கியோ வில் நடைபெற இருந்தது.
தற்போது கொரோனா வைரசால் ஒலிம்பிக் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஜப்பான் அரசு இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காத்து வந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பல நாடுகளுக்குப் பரவி மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகிறது.
இதனால் மக்கள் வீட்டினுள்ளேயே தங்கும்படி பல நாடுகளில் அரசாங்கங்கள் உத்தரவிட்டுள்ளது.
பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி, 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் தற்போது “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக், டோக்கியோவில் நடைபெற இருந்த 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி,
அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப்படுவதற்கான ஒப்புதலை கொடுத்துள்ளார்” என ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்
பல நாட்டில் வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டும் என்பதே கனவு , ஆனால் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப் படுவது ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் விளையாட்டை விட வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலம் முக்கியம் என கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.