Racism in Sports; போட்டியின் நடுவில் வெளியேறிய மோசோ மரிகா, போர்டோ அணியின் பயிற்சியாளர் கூறியதாவது.
போர்டோ அணியில் ஃபார்வார்டு பொசிஷனில் விளையாடி வரும் 28 வயதான மோசோ மரிகா (Moussa Marega) போட்டியின் பாதியில் 69ஆம் நிமிடத்தில் வெளியேறினார்.
இந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் இன வெறியை காமித்து கோஷம் எழுப்பியதால் கோபமடைந்த மோசோ பகுதி ஆட்டத்திலையே பெவிலியன் சென்றுவிட்டார்.
மோசோ போர்டோ அணிக்காக 25போட்டிகளில் விளையாடி 15 கோல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்டோ அணியின் பயிற்சியாளர் கூறியதாவது
நாடு, மதம், இனம், நிறம் மற்றும் மொழி கடந்து நாங்கள் ஒரு குடும்பமாக செயல்பட்டு விளையாடி வருகிறோம். இம்மாதிரியான ஒரு செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ கூறினார்.
Racism in Sports
கால்பந்தாட்டத்தில் ரேசிசம் என்பது புதிது இல்லை. குறிப்பாக கறுப்பின வீரர்கள் அடிக்கடி இவ்வாறு அவமானப்பட்டிருக்கிறார்கள். நேற்று நடந்தது அதில் ஒன்று.
சில சமயங்களில் அடி தடி சண்டை வர சென்று விடும். கால்பந்தாட்டம் மட்டுமல்ல மற்ற விளையாட்டுகளிலும் இது நடப்பது உண்டு.
ஒரு வீரரின் ஜாதி, மதம், இனம், நிறம் போன்றவை பார்த்து வாய்ப்பு மறுக்கப்படுவதை நாம் கண்கூட பார்த்துள்ளோம்.
இந்தியாவில் சொல்லவே தேவை இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியலையும் அவர்கள் பின்புறத்தையும் பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும்.
இந்திய முன்னணி நட்சத்திர வீரரான எம்எஸ் தோனி கூட அவரின் பின்புறத்தை வைத்து அவமதித்த ஊர் இது. தமிழ்நாட்டு ரஞ்சி அணியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை ஒரு முறை பாருங்கள்.
இவ்வளவு ஏன் விளையாட்டை வைத்து வரும் பயோ பிக் திரைப்படங்கள், பகுதி விளையாட்டு கற்பனை திரைப்படங்களை பார்த்தால் இது எந்த அளவுக்கு உண்மை என புரியும்.
நாகரீகம் ஒரு பக்கம் வளர்ந்ததாக கூறினாலும் மனிதனின் அழுக்கு படிந்த மனதும், அவன் அழுகிப்போன புத்தியும் இன்னும் மாறவில்லை என்பதை நினைக்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நேராமல் ரசிகர்களாகிய நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.