Doctor First Look: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் பெர்த் டே ட்ரீட் மற்றும் டாக்டர் படக்குழு விவரங்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள்
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் நேற்று. ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்.
சிவாகார்த்திகேயன், ஹீரோ பட வெளியீட்டுக்கு பிறகு அடுத்தடுத்து டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்கு ஸைன் செய்துள்ளார். இன்று Doctor First Look வெளியாகி உள்ளது.
டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்கில் சிவா ஒரு சோபா மீது உட்கார்ந்தபடி இரண்டு கைகளிலும் ஒரே ரத்தமாக இருக்கிறது. கையில் ஆபேரேசன் செய்யும் சர்ஜிகள் கத்தி வைத்து மிரட்டுகிறார்.
சோடப்பெட்டி கண்ணாடி, போலோ டி ஷர்ட் மற்றும் ஒரு பார்மல் பேண்ட் போட்டு தன்னை சுற்றி ஒரே சர்ஜிகள் கத்தியை பரப்பி போட்டு வைத்து இருக்கிறார்.
டாக்டர் படக்குழு விவரங்கள்
சிவகார்த்திக்கேயனின் அடுத்த திரைப்படம் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்தில் பிரபலமான இயக்குனர் இவர்.
இப்படத்தை கேஜெஆர் ஸ்டுடியோஸ் மட்டும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் சேர்ந்து தயாரிக்கின்றனர். இதில் தெலுங்கு நடிகை ப்ரியா மோகன், யோகி பாபு முன்னனி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு விஜய் கார்த்திக்கும், எடிட்டிங் வொர்க் நிர்மலும், ஆர்ட் வொர்க் கிரண் அவர்களும் செய்கிறார்கள்.
படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு அன்பரிவு காஸ்டிங்க் செய்யப்பட்டுள்ளனர்.