உலகின் நீளமான மலை தொடர்ச்சி டாப் 10 பட்டியல். மிக நீளமான மலைத்தொடர் எது? world longest mountain range in tamil. நீண்ட மலை தொடர்ச்சிகள்.
நீண்ட மலை தொடர்ச்சிகள் பற்றி அறிய ஆர்வம் நிறைய நபர்களுக்கு உண்டு. அங்கு பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதைவிட அதிகம்.
நிலப்பகுதியின் மேல் உயரமாக அமைந்துள்ள பெரிய செங்குத்தான நில அமைப்பு பகுதிக்கு பெயரே மலை ஆகும்.
அவற்றில், உலகின் நீளமான மலை தொடர்ச்சி எங்கு உள்ளது. (world longest mountain range in tamil) மிக நீளமான மலைத்தொடர் எது? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இந்தப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கும் மிக நீளமான மலைத்தொடர் எது? என்பதை கற்பனை செய்துகொண்டே படியுங்கள்.
நீங்கள் சரியாக கண்டுபிடித்துள்ளீர்களா என இறுதியில் கமெண்ட் செய்யுங்கள் பார்க்கலாம்.
10. அல்தாய் மலைத்தொடர்
இந்த மலை தொடர் ஆசியா கண்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இதன் நீளம், 2000 கீ.மீ. இதில் 4500 மீ உயரத்தில் பெலுகா என்ற சிகரமும் அமைந்துள்ளது.
இது ரஷ்ய மங்கோலிய சீனா கஜகஸ்தான் போன்ற நாடுகளை இணைக்கின்றது அதிகமான மலை பகுதிகள் மங்கோலியா நாட்டில் தான் அமைந்துள்ளது.
9. இமயமலை தொடர்ச்சி
இது ஆசிய கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது . இந்த மலைத்தொடர் மற்ற மலைத்தொடர்களைவிட மிக இளமையான மலைத்தொடர் ஆகும்.
இதன் நீளம் 2400 கிமீ ஆகும். இங்குதான் உலகின் மிக உயரமான மலை என அறியப்படும் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது இதன் உயரம் (8848 மீ ) ஆகும்.
8. அப்பலாசியின் மலைத்தொடர்
உலகின் நீண்ட மலைத்தொடர்ச்சியில் எட்டாவது இடத்திலிருக்கிறது. இதன் நீளம் 2444 கிமீ மற்றும் அகலம் 300 கிமீ.
இது உலகின் மற்ற மலைகளைவிட உயரம் குறைவானது இம்மலைத் தொடரில் மிக்செல் என்னும் சிகரம் அமைந்துள்ளது.
இதன் உயரம் 2037 மீ ஆகும். கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளுக்கு கிழக்கு கடற்கரை எல்லையாக அமைந்துள்ளது.
7. அட்லஸ் மலை தொடர்கள்
அட்லஸ் மலைத்தொடர் நீண்ட மலை தொடர்கள் ஏழாவது இடத்தில் உள்ளது. இதன் நீளம் 2500 கிமீ ஆகும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதில் டுப்கால் என்ற சிகரம் உள்ளது.
இதன் உயரம் (4165 மீ) ஆகும். இந்த அட்லஸ் மலை தொடர்கள் சகாரா பாலைவனத்தின் எல்லைப் பகுதியாக காணப்படுகிறது.
மேலும் இந்த மலை நான்கு குவியமாக பிரிக்கப்படுகிறது.
1. மத்திய அட்லஸ்
2. ஆண்டி அட்லஸ்
3. உயர் அட்லஸ்
4. சகரான் அட்லஸ்
6. யூரல் மலைத்தொடர்
யூரல் மலைத்தொடர் ஆறாவது நீண்ட மலைத்தொடராக உள்ளது. இதன் நீளம் 2500 கிமீ மற்றும் அகலம் 150 கிமீ ஆகும்.
இது ரஷ்யாவில் வடமேற்கு பகுதியில் தொடங்கி கசகஸ்தானில் வடக்கு பகுதிகளில் நீண்டுள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பா கண்டங்களுக்கு எல்லையாக அமைகிறது.
5. குன்லுன் மலை தொடர்ச்சி
உலகின் நீண்ட மலைத்தொடர்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பது குன்லூன் மலை தொடர்ச்சி ஆகும்.
இதன் நீளம் (3000 கிமீ).
வடக்கு எல்லையில் கோபிப்பாலைவனம், தெற்கு எல்லையில் திபெத் பீடபூமி, கிழக்கு எல்லையில் பாபிர் முடிச்சு, மேற்கு எல்லையாக வடகிழக்கு சீனா அமைந்த்துள்ளது.
இந்த மலையில் “குன்லுன் தேவதை” என்ற சிகரம் (1895 மீ ) உயரத்தில் அமைந்துள்ளது.
4. டிரான்டான்டிரிடிக் மலைத்தொடர்
இதன் அமைவிடம் அண்டார்டிகா கண்டம் 98% விழுக்காடு பனி உரைவுகளாக காணப்படுகின்றன.
இங்கு சீல்கள், பெங்குவின்கள், கடல்வாழ் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் வாழ்கின்றன.
இதன் நீளம் 3500 கிமீ மற்றும் அகலம் 100 முதல் 280 கி.மீ. இது குறுகிய மலைத்தொடர் ஆகும். இதில் கிர்க் பாட்டிரிக் என்ற சிகரம் 4528 மீ உயரம் கொண்டுள்ளது.
3. கிரேட்டிவைட்டிங் ரேஞ்சர்
ஆஸ்திரேலியா கண்டத்தில் அமைந்துள்ள மலை தொடர். இதன் நீளம் 3500 கிமீ ஆஸ்திரேலியா வடகிழக்கு குயின்லாந்து தொடங்கி மேற்கு விக்ட்டோரிய வரை கிழக்கு கடற்கரை ஒட்டிய மாலைத் தொடர் அமைந்துள்ளது.
இம்மலையில் கோஸ் சியுஸ்கோ என்ற சிகரம் 2228 மீ உயரத்தில் இங்கு காணப்படுகிறது. அதேபோல் இங்கு அழகான டேஞ்சர் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது.
2. ராக்கி மலைத்தொடர்
இந்த மலைத்தொடர் வட அமெரிக்கா கண்டத்தில் மேற்கு பகுதியில் 4800 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. 4400 மீ உயர அளவில் எல்பேர்ட் சிகரம் அமைந்துள்ளது.
இந்த மலை சிறந்த சுற்றலாத் தளமாக இருக்கின்றது. எனவே, சுற்றுலாப்பயணிகள் முகம் இட்டு தங்கி பொழுதைக் கழிக்கின்றனர்.
நடைப்பயணம், பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், மலையேறுதல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவை இந்த மலையின் பொழுது போக்கு அம்சங்கள்.
1. ஆண்டிஸ் மலைத்தொடர்
நீண்ட மலைத்தொடரில் முதல் இடத்தில உள்ளது ஆண்டிஸ் மலைத்தொடர். இது தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது.
இதன் நீளம் 7000 கிமீ மற்றும் அகலம் 500கிமீ ஆகும். தென் அமெரிக்கா மேற்கு கடற்கரை ஒட்டி வடக்கு தெற்காக அமைந்துள்ளது. அஃக்கோன்காகுவ என்ற சிகரம் 6962 மீ உயரம் கொண்டுள்ளது.
இமையமலைக்கு அடுத்த படியாக உயரமான சிகரங்கள் இந்த மலை தொடரில் காணப்படுகிறது. மிகப்பெரிய பீடபூமி அலிபிளாலோ இங்குள்ளது.
ஓஸோஸ் எல் சாலடோ சிலி என்ற எரிமலை இங்குள்ளது. 3500 வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் இந்த மலைத்தொடரில் வாழ்கின்றன.
இந்த மலைத்தொடர் பருவ நிலையை அடிப்படையாகக் கொண்டு மூன்று பகுதியாகப் பிரித்துள்ளனர். வெப்பமலை ஆண்டிஸ், உலர் ஆண்டிஸ், வெப்பமண்டல மலைமிகு ஆண்டிஸ் என மூன்று பிரிவு உண்டு.
உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல்