நானும் ஆல்ரவுண்டர் தான்டா அடித்துக்காட்டிய அந்த வீரர். அதிரடி அரைசதம் அடித்து இந்தியா லெஜெண்ட்ஸ் அணிக்கு வெற்றி தேடி தந்தார் இர்ஃபான் பதான்.
ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் (ROAD SAFETY WORLD SERIES) போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
இதில் 5 அணிகள், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது.
நேற்று இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாலை பாதுகாப்பு டி20 தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை லெஜெண்ட்ஸ் அணி பேட்டிங்
டாஸ் வென்ற சச்சின் பௌலிங் தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு தில்ஷன் – கலுவிதரானா முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. முனாப் படேல் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இந்தியா லெஜெண்ட்ஸ் அணி பேட்டிங்
சமிந்தா வாஸ் சிறப்பான பந்து வீச்சால் சச்சின், சேவாக் மற்றும் யுவராஜ் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதன் மத்தியில் கைஃப் நிதான ஆட்டம் ஆடி கை கொடுத்தார்.
பின்னர் கீழ் வரிசையில் களம் இறங்கிய இர்ஃபான் பதான் மரண காட்டு காட்டினார். கடைசி இரண்டு ஓவர்களில் ஆட்டத்தை மாத்தினார்.
கடைசி மூன்று ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து போட்டியை எளிதாக்கினார். இந்திய அணி கடைசி ஓவரின் நான்காம் பந்தில் வெற்றியடைந்தது.