Home வரலாறு சாய்னா நேவால் பிறந்தநாள் இன்று

சாய்னா நேவால் பிறந்தநாள் இன்று

323
0

இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நல்லா விளையாடினாலும் வெற்றிகள் பெற்றாலும் இங்கு உள்ள இந்திய ரசிகர்களை கவர்வது மிகவும் கடினமான ஒன்று .

சாய்னா நேவால்

இப்படி பேட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்தை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இந்திய ரசிகர்களையும், இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தவர்தான் சாய்னா நேவால்.

1990 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் ஹிசார் என்னுமிடத்தில் ஹர்விர் சிங் நேவால் மற்றும் உஷாராணி நேவாலுக்கு பிறந்தவர்தான் சாய்னா நேவால்.

இவர் இந்தியாவின் ஒற்றையர் பிரிவு தொழில்முறை பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். இவர் முன்னாள் உலக தரவரிசையில் நம்பர் ஒன், 24 சர்வதேச பட்டம் மற்றும் 11 சூப்பர் சீரிஸ் பட்டம் பெற்றுள்ளார்.

தரவரிசை முதலிடம்

2009ஆம் ஆண்டு உலக தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்த சாய்னா நேவால் 2015ஆம் ஆண்டு அதாவது ஆறு ஆண்டுகளுக்கு பிறகுதான் உலகத் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீராங்கனைகளில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனை ஆவார். ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது வீரரும் ஆவார்.

இதற்கு முன்னாள் ஆண்கள் பிரிவில் பிரகாஷ் படுகோனே முதலிடத்தில் இருந்துள்ளார்

இவர் தனது வாழ்நாள் போட்டியில் 433 வெற்றிகளும் 195 தோல்விகளும் பெற்றுள்ளார்.

பதக்கங்கள்

இவர் ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளார் மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இவர். தான் பங்கு பெற்ற இரண்டாவது முறை 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்த பதக்கத்தை வென்றார்.

உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெங்கலம் வென்றுள்ளார். உபர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு முறை வெண்கலம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்கள் வென்றுள்ளார்.

ஆசிய கேம்ஸ் போட்டியில் இரண்டுமுறை வெண்கலப் பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று முறை வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

பாரதிய ஜனதா இனைந்தார்

கடந்த சில காலங்களாகவே இவர் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. தற்போது கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பாரதிய ஜனதாவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இன்று இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Previous article17/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleதிருநெல்வேலியில் செல்போன் சுவிட்ச்ஆப்; கொரோனாவை பரப்பிய மலையாளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here