வீண் விவாதம், விதண்டாவாதம், சுயநல பேச்சுக்கள் என கடந்த சில ஆண்டுகளாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை அறையில் ஈடுபட்டுவந்தார்.
வீரர்களை இழிவுபடுத்தியும் வீரர்களை மட்டம் தட்டியும் சொந்த இந்திய நாட்டு வீரர்களை வம்புக்கு இழுப்பதும் வழக்கமாகவே வைத்திருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
கடந்தாண்டு ஜடேஜாவை வம்புக்கிழுத்து அசிங்கப்பட்டு கொண்டார். ஐபிஎல் மும்பை அணிக்கு சாதகமாக பேசுவதும் மற்ற அணி வீரர்களை மட்டம் தட்டி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த ஆண்டுகளில் வர்ணனையில் பல சர்ச்சைகளில் சிக்கி நெட்டிசன்களிடம் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.
தான் பிரபலமாகும் நோக்கிலேயே மற்ற வீரர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே பேசிவந்தார். கடந்த ஆண்டு ஹர்ஷா போகலேவிடம் வீண் விவாதங்கள் செய்து ஹரசாப போகலேவை வம்புக்கு இழுத்தார்.
இதுவரை பிசிசிஐ அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காமலும், அறிவுரை சொல்லாமலும் அமைதி காத்து வந்தது.
கடந்த 12ஆம் தேதி இந்தியா வந்த தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்தது. அந்த தொடரில் வர்ணனையாளர் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் பெறவில்லை.
சுனில் கவாஸ்கர் சிவராமகிருஷ்ணன் போன்ற முன்னாள் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
நீண்ட நாள் அமைதிக்கு பிசிசிஐ தற்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியுள்ளது.
அடுத்து நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அவர் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில நாட்கள் அமைதி காத்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
“தான் வர்ணனை செய்வதை ஒரு மதிப்புக்குரிய வேலையாக தான் செய்தேன். நான் என் வேலையும் சரியாக தான் செய்தேன். கடந்த சில ஆண்டுகளாக எனது அனைத்து வர்ணனையும் பிசிசிஐக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் ஆகவே அவர்களின் முடிவுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆக சர்ச்சைக்கு சங்கம் நடத்திய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீண்டும் வர்ணனைகள் அறையில் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே
1987 – 1996 ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்காக விளையாடி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளிலும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 4037 ரன்கள் எடுத்துள்ளார்.