16/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷ ராசிபலன்
பதட்டமான பேச்சு இருக்கும். சற்று பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டிய நாளாகும். வியாபார பயணங்கள் இருக்கும். பிராத்தனை அவசியம் தேவையாகும்.
துணையிடம் அகந்தை பேச்சுகள் வேண்டாம். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
சந்திர பகவானை விளக்கேற்றி வழிபடவும்.
ரிஷப ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்குரிய நாளாகும். திறமையை வெளிபடுத்த வேண்டிய நாள். பணியில் வெற்றி நிச்சயம் கிட்டும்.
துணையிடம் அன்பு மேம்படும். உறவினர்கள் வருகையால் நன்மைகள் உண்டு. நகைச்சுவை கலந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. தேக பலத்தோடு இருப்பீர்கள்.
விநாயகரை வழிபட கூடுதலாக பலன்கள் உண்டு.
மிதுன ராசிபலன்
இன்றைய நாள் மிகவும் உற்சாகமாக இருக்கும். எதையும் தைரியமாக எதிர் கொள்வீர்கள். சக பணியாளர்கள் நட்புறவு மேம்படும்.
துணையிடம் காதல் அதிகரிக்கும். பண புழக்கம் அதிகமாகும். சேமிப்பு அவசியம். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.
சிவ பெருமானை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
கடக ராசிபலன்
இன்றைய செயல்கள் மந்தமாக இருக்கும். அதனை மாற்றி துடிப்புடன் இருப்பது உங்களின் கையில் உள்ளது. பணியில் உழைப்பு அவசியமாகும்.
கணவன் மனைவியிடையே புரிதல் நன்றாக இருக்காது. வாக்குவாதம் வரலாம். தனலாபம் தேவையான அளவு இருக்காது. இருமல், காய்ச்சல் போன்றவை வர வாய்ப்புண்டு.
அம்பிகையை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டு.
சிம்ம ராசிபலன்
இன்று தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனை தாங்களே சரி செய்து கொள்ள வேண்டும். செயல்களை பொறுமையாக ஆற்ற வேண்டும்.
கணவன் மனைவியிடையே பேச்சில் கவனம் தேவை. பணவரவு அதிகமாக வர வாய்ப்பில்லை. தோல் எரிச்சல் வரலாம்.
விநாயகரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.
கன்னி ராசிபலன்
இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சி இருந்தால் போதும் வெற்றி வந்து சேரும். பணியில் கூடுதல் ஊக்கத் தொகை கிடைக்கும்.
கணவன் மனைவியிடையே அன்பு அதிகமாக இருக்கும். பண வரவும் சிறப்பாக இருக்கும். ஆற்றல் மிகுந்த நாளாக இருக்கும்.
மகாலட்சுமியை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.
துலா ராசிபலன்
இன்று சோதனை மிகுந்த நாளாக இருக்கும். அதிகப்படியானப் பேச்சை குறைத்து கொள்ளவும். பணிகள் கடுமையாக இருக்கும்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். லாபம் குறைவானமாக இருக்கும். செலவுகளை குறைக்கவும். முதுகு வலி ஏற்படலாம்.
பெருமாளை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.
விருச்சிக ராசிபலன்
இன்று அனுபவ பாடம் கற்பீர்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவும். பணி வளர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.
குடும்பத்தில் வலுவான பிணைப்பு இருக்கும். சேமிக்கும் அளவு பணம் வந்து சேரும். உடல் நலத்தில் குறையில்லை.
சந்திர பகவானை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.
தனுசு ராசிபலன்
இன்று முக்கிய முடிவுகள் எதுவும் வேண்டாம். சுப காரிய பேச்சுகளை தள்ளி போடவும். பணியில் சிறு தவறுகள் ஏற்படலாம்.
வீட்டில் சுமூகமான நிலை இருக்காது. தங்களின் தைரியம் குறையும். நிதி நிலை மோசமாக இருக்கும். உணவில் கவனம் தேவை.
காமாட்சியம்மனை வழிபட துன்பங்கள் குறையும்.
மகர ராசிபலன்
இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நல்ல பலன்கள் பல வந்து சேரும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.
பயணங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் பலம், மன பலம் அதிகரிக்கும்.
விநாயகரை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.
கும்ப ராசிபலன்
இன்று சாதகமான நாளாக இருக்கும். நல்ல வளர்ச்சி மிக்க நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் நிறைய உண்டு.
துணையிடம் நட்புறவு மேம்படும். பண சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அம்பிகையை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
மீன ராசிபலன்
இன்று விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாளாகும். கோபத்தை குறைக்க வேண்டும். சக ஊழியர்கள் இடையே கருத்து வேறுபாடு வரலாம்.
குடும்பத்தில் உணர்ச்சிகளை கட்டுபாட்டில் வைக்கவும். நிதி நிலை மந்தமாக இருக்கும். முட்டி வலி ஏற்பட வாய்ப்புண்டு.
சிவபெருமானை விளக்கேற்றி வழிபடுங்கள் தொல்லைகள் குறையும்.
16/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.