சேவாக் அதிரடியால் இந்திய லிஜெண்ட் அணி வெற்றி. ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் (ROAD SAFETY WORLD SERIES) போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
ஐந்து அணிகள்
இதில் 5 அணிகள், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது.
ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் (ROAD SAFETY WORLD SERIES) முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணிக்கும் இந்திய லிஜெண்ட் அணிக்கும் நடைபெற்றது.
சச்சின் கேப்டன்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டனாக சச்சின் தெண்டுல்கர் செயல்பட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர், சேவாக் போன்றவர்கள் இந்தியாவில் களம் இறங்குகிறார்கள். வீரர்களைஆவலாக எதிர்பார்த்து மைதானம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர்.
அணி வீரர்கள் விபரம்
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைப், கோனி, இர்பான் பதான், ஜாகிர் கான், டிகி, பகத்துலே, முனாப் பட்டேல், பிரக்யன் ஓஜா போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணி தரப்பில் லாரா, கங்கா, சந்தர்பால், கூப்பர், ஹயத், பவல், ஜாக்கப், பெஸ்ட், சுலைமான் பென், கூலிங்ஸ், ராம் நாரயன் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.
சந்தர்பால் அரைசதம்
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணியின் அதிகபட்சமாக சந்தர்பால் 67 ரன்கள், கங்கா 31 ரன்கள், 31 லாரா 17 ரன்கள், ஹயத் 12 எண்கள், பெஸ்ட் 11 ரன்கள் எடுத்தனர்.
இந்திய லிஜெண்ட் அணி தரப்பில் முனாஃப் படேல், ஜாகிர் கான், பிரக்யன் ஓஜா தலா 2 விக்கெட்டுகளும் இர்பான் பதான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இந்தியாவின் லெஜன்ட் தொடக்கம்
இந்தியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களம் இறங்கினார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
வழக்கம்போல சேவாக் முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்தியா வெற்றி
இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவின் தொடக்க ஜோடி சேவாக் மற்றும் சச்சின் இருவரும் சேர்ந்து 10.2 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்தது.
இந்தியாவின் அதிகபட்சமாக சேவாக் அரைசதம் அடித்து 57 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
சச்சின் டெண்டுல்கர் தன் பங்கிற்கு 36 ரன்களும், கைப் 14 ரன்களும், யுவராஜ் சிங் 10 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணிக்கு 4 ரன்கள் தேவை இருந்தது அப்போது சேவாக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
ரசிகர்கள் ஆரவாரம்
ரசிகர்கள் அனைவரும் சிக்ஸ், சிக்ஸ் என்று ஆரவாம் செய்ய, அடுத்த பந்தில் சேவாக் பவுண்டரி ஆக ஆட்டத்தை முடித்து வைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கூப்பர் 2 விக்கெட்டும், பென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அதிரடியாக ஆடிய வீரேந்திர சேவாக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அடுத்த போட்டி
இந்திய லெஜெண்ட் அணி அடுத்த போட்டியில் இலங்கை லெஜெண்ட் அணி வருகிற மார்ச் 8 தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு இதே மைதானத்தில் எதிர்கொள்கிறது.