Home விளையாட்டு RSAvsAUS 1st ODI; 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

RSAvsAUS 1st ODI; 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

199
0
RSAvsAUS 1st ODI

RSAvsAUS 1st ODI; 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவில் தோற்கடித்து, தொடரை வென்றது.

அடுத்ததாக 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில், முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள போலாந்து பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

RSAvsAUS 1st ODI

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மலன் மற்றும் டி காக் களம் இறங்கினார்கள்.

ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மலன் தனது விக்கெட்டை இழந்தார்.

தென் ஆப்பிரிக்கா 291

கேப்டன் டி காக் 15 ரன்கள், பவுமா 26 ரன்கள், வெர்ரினே 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கிளாஸன் மற்றும் மில்லர் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த ஜோடி 149 ரன்கள் எடுத்தது. 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கிளாஸ் 123 ரன்களும் மில்லர் 64 ரன்கள் சேர்த்தனர் ஆஸ்திரேலியா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் ஸ்டார்க் 2 விக்கெட்டும் ஹாலிவுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

RSAvsAUS T20: டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தோல்வி

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 25, பின்ஸ் 10, ஸ்மித் 76, லோபுசானே 41, மிச்செல் மார்ஸ் 16, ஆர்சி ஷார்ட் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்கள்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நெகிடி 3 விக்கெட்டும் நாட்ஜே மற்றும் ஷாம்சி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர் இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது

114 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்த ஹய்ன்றிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற மார்ச் 4ஆம் தேதி புளும்போர்டின் நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

Previous articleதியேட்டர் இல்லாததால் தள்ளிப்போன பரமபதம் விளையாட்டு!
Next articlePonniyin Selvan: குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here