#CSKvsKXIP இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி மந்தமாக ஆடியது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 150 ரன்களைக் கடக்குமா எனக் கேள்வி எழுந்தது.
கடைசி இரண்டு ஓவரில் பஞ்சாப் பவுலர்களை தோனி துவம்சம் செய்தார். அவர் இரண்டு ஓவரில் அடித்த ரன்களே சிஎஸ்கே அணியை வெற்றி பெறச்செய்தது.
20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னை அணியைப் போலவே மந்தமாக ரன்களை எடுத்து வந்தது.
கே.எல்.ராகுல் 41 ரன்கள் இருக்கும்போது தோனிக்கு அருகில் அடித்துவிட்டு ரன் ஓட முயன்றார். மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி. ஆனால் பைல்ஸ் கீழே விழாமல் ராகுலைக் காப்பற்றிவிட்டது.
கடைசி இரண்டு ஓவரில் 40 ரன்கள் தேவை என்ற நிலை நிலவியது. 18 ஓவரை வீசிய சாஹர் இரண்டு புல் டாஸ் நோபல் வீச பந்தே போடமால் 9 ரன்கள் கொடுத்துவிட்டார்.
இதனால் எங்கே சாஹர் சங்கு ஊதி விடுவாரோ எனப் பயந்த தோனி பக்கத்தில் வந்து கடுப்பு கலந்த கூல் முகத்துடன் ஆறுதல் கூறினார்.
பின்பு 6 பந்துகளை அற்புதமாக போட்டு கடைசி பந்தில் விக்கெட்டையும் எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார்.
அடுத்து கடைசி ஓவரில் 4 பந்துக்கு 4 சிக்சர் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. ஸ்காட் குக்ளிஞ்சின் அற்புதமாக வீசி 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.