மே 28ஆம் தேதி வரை எந்த வித கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது, கொரோனா பயத்தால் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எடுத்தது.
அடுத்த கிரிக்கெட் போட்டிகளை ஜூன், ஜூலை மாதங்களிலே எதிர்பார்க்க முடியும். கொரோனா பாதிப்பால் உலகமே அச்சம் கொண்டிருக்கும் இந்த நிலையில் கிரிக்கெட் கைவிடுவதே நல்லது.
டாம் ஹாரிசன் கூறுகையில்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிரிக்கெட்டை கைவிடுவதே நாட்டிற்கும் வீரர்களுக்கும் நல்லது.
கிரிக்கெட்டை கைவிடுவதே வருத்தமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த நேரத்தில் போட்டியை நடத்தினாலும் அது வணிகரீதியாக பாதிக்கும்.
இங்கிலாந்தில் ஏற்கனவே ஹோட்டல், பப் மற்ற கூட்டம் இடங்கள் அனைத்தையும் அடைக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவு விட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இது வரை கொரோனாவால் 160 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.