பீட்டர்சனை சரியாக பயன்படுத்த தவறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் – வாகன் .
“ ஒரு தொடரை வென்றால் அதை அணைத்து வீரர்களும் இனைந்து கொண்டாடுவோம் , சந்தோஷத்தை பகிர்வோம் அது இயல்பு. அதே நேரத்தில் தோல்வி அடைந்தாலும் அதே போல தான ஒன்றுபட்டு நிற்க வேண்டும் … ஆனால் அப்படி நடப்பதே இல்லை. வென்றால் உல்லாச கூப்பாடு , அதே தோற்றால் “பலி ஆடு” தேட துவங்கி விடுகிறோம் !
அப்படி தான் கெவின் பீட்டர்சன் பலி ஆடாக ஆக்கப்பட்டு, அணியிலிருந்து ஓரங்கட்டப் பட்டார். பெரிய தொடர்களில் அவரை நன்றாக பயன்படுத்திக் கொண்டு. ஆஷஸ் தொடரில் தோற்றவுடன் அவரை கட்டம் கட்டிவிட்டனர்.
ஒரு தொடரை இழப்பதற்கு ஒரு நபர், ஒரே ஒரு வீரர் எப்படி பொறுப்பாக முடியும் ? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் விஷயத்தில் நடந்துக்கொண்ட விதம் மிகவும் விசித்திரமாக உள்ளது.
உண்மையில் கெவின் மிக தனித்துவமான வீரர், எல்லா வீரர்களும் பார்ம் அவுட் ஆவது சகஜம். அவரை சரியான முறையில் நடத்தி இருந்தால் இங்கிலாந்து இன்னும் பல பெரிய வெற்றிகளை பெற்று இருக்கும்.” இவ்வாறு ஆஸ்திரேலியா செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர், கேப்டன் மைக்கேல் வாகன்.
சா.ரா.