வீராட் கோலி சமூகவலைதளங்களில் தனக்கு பிடித்த வர்ணனையாளர் யாரென்று கெவின் பீட்டர்சன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்து உள்ளது.
அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து வருகிறது.
இந்த கொரோனா வைரஸை தடுக்க பல நாட்டு அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவின் பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வெளியில் வராமல் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனால் கிரிக்கெட் வீரர்கள் இந்த 21 நாளை தங்கள் குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
இருந்தும் அவர்கள் பொழுது போகவில்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கும் பல கிரிக்கெட் வீரர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ரோகித் சர்மா நாங்கள் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
கெவின் பீட்டர்சன் பல கிரிக்கெட் வீரர்களுக்கு சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார். இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும் பதில் அளித்து வருகிறார்கள்.
தற்போது விராட் கோலியிடம் கெவின் பீட்டர்சன் உங்களுக்கு பிடித்த வர்ணனையாளர் யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு வீராட் கோலி தனக்கு பிடித்த வர்ணனையாளர் இங்கிலாந்தின் நாசிர் ஹூசைன் என்றும் பதிலளித்திருந்தார். இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது ரசிகர்களுக்கு.
ஹர்ஷா போக்லே, ரவிசாஸ்திரி போன்றவர்கள் இருந்தும் இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய வர்ணனையாளர் நாசிர் ஹூசைன் சொல்லியது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசிர் ஹுசைன் அடிக்கடி இந்திய வீரர்களை மட்டம் தட்டி பேசும் பழக்கம் கொண்டவர். இதனால் பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
நாசிர் ஹூசைன் தமிழகத்தில் பிறந்தவர். பின்பு இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.