16 வயது வீரங்கணை கண்ணீர்; இந்தியா உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்ன? லீக்சுற்றில் அனைத்துப்போட்டிகளும் வெற்றி. இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி எப்படி நடந்தது?
இந்தியா குவித்த வெற்றிகள்
மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெற்று முடிந்துவிட்டது. ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை 5-வது முறையாக தட்டிச் சென்றுவிட்டது.
லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஸ்ரீலங்கா என அனைத்து அணிகளையும் அடித்தது நொறுக்கி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோதாமலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா இறுதி போட்டிக்கு செல்வது இதுவே முதல்முறை.
ஆஸ்திரேலியா குவித்த வெற்றிகள்
இதுவரை 7 முறை நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சொந்த ஊரில் 5-வது உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இந்த வருட போட்டியில் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. வங்கதேசம், நியூசிலாந்து, ஸ்ரீலாங்கா என மற்ற மூன்று அணிகளுடன் மோதி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் மழை குறுக்கிட்டு சவால்கள் ஏற்படுத்தினாலும், தென்னாப்ரிக்கா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதி போட்டி என்ன மேஜிக் நிகழ்ந்தது
இறுதி போட்டி நெற்றியில் வீரத் திலகம் எல்லாம் இட்டு பக்காவாக பந்து வீச சென்றது இந்திய மகளிர் அணி.
2003 கங்குலி தலைமையில் ஆடவர் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியதை போன்று. அன்று இந்தியா முழுவதும் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடந்தது.
நீண்ட வருடங்களாக இந்தியா உலகக்கோப்பை கனவில் மிதந்த தருணம் அது. முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 4 ரன்களில் அவுட். மொக்கையாக தோற்றது இந்திய அணி.
அதே போன்றே மகளிர் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது. குறிப்பாக ஹீலி ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கினார்.
ஹாட்ரிக் சிக்சர்கள் பறக்க விட்டு மைதானத்தில் இருந்த 80 ஆயிரம் ரசிகர்களை குஷிப்படுத்தினர். குறிப்பாக அவரது கணவர் ஸ்டார்க்-யை களிப்படைய வைத்தார்.
சொந்த ஊர், ஏற்கனவே 4 முறை சாம்பியன். பிறகு ஆஸ்திரேலியா சும்மா இருக்குமா? ஸ்கெட்ச் போட்டி இந்திய பவுலர்களை தாக்கியது.
முதல் முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி நிச்சயம் சற்று பதற்றத்தில் இருந்திருக்கலாம்.
சிலர் ஏற்கனவே வெற்றி பெற்ற அணி தானே என சற்று அஜாக்ரதையாகக் கூட இருந்திருக்கலாம்.
அதுவரை நன்கு விளையாடி வந்த ஷபாலி இறுதிப்போட்டியில் என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் சொதப்பினார்.
ஹீலி 15 ரன்கள் பக்கம் இருந்த நிலையில் அடித்த கேட்ச் ஒன்று கையில் கிடைத்தும் பிடிக்காமல் கோட்டை விட்டார் ஷபாலி.
போட்டிங் முரட்டு சொதப்பல், 2 ரன்களில் நடையைக்கட்டினார். இந்திய அணி ஹிமாலயா இலக்கு ரன் சேசிங் என்ற நினைத்த அந்த தருணமே தோற்றுவிட்டனர்.
பந்துவீச்சு சரியாக தேர்வு செய்யாமல் விட்டதே இதற்கு காரணம். ஆஸ்திரேலியாவை 120 முதல் 130 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்திருந்தால் ஸ்கோரைக் கண்டு மலைக்கத் தேவையில்லை.
கண்மூடி திறப்பதற்குள் ஹீலி 39 பந்துகள் 75 ரன்களை கடந்ததார். இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி.
அதே நேரம் ஹீலி அவுட் ஆகிய உடன் விக்கெட் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா அணி.
ஷபாலி அந்த ஒரு கேட்ச்-யை பிடித்து இருந்தால் இந்த மேட்ச் தலைகீழாக மாறி இருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு.
16 வயதே ஆனா ஷபாலி, சச்சின் டெண்டுல்கர் போன்று இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாட வந்துள்ளார்.
1989 முதல் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் உலகக்கோப்பை கனவு 2011-ஆம் ஆண்டு தான் நிறைவேறியது.
உலகக்கோப்பை தொடரில் எத்தனை போட்டிகள் வென்றாலும், எத்தனை போட்டிகள் சிறப்பாக விளையாடினாலும், இறுதி போட்டியில் நாம் என்ன செய்தோம் என்பதைத்தான் இந்த உலகம் நினைவில் கொள்ளும்.
எனவே, இந்தப் போட்டி இந்தியர்கள் மறக்க வேண்டிய நாள். மகளிர் தினத்தை ஆஸ்திரேலியா அமோகமாக கொண்டாடிவிட்டது. இந்தியாவிற்கும் ஒரு நாள் வரும் காத்திருப்போம்..!