1980 ஆம் ஆண்டு வின்ஸ் மெக்மஹோன் உருவாக்கிய wwe, wrestlemania என்கிற பெயரில் முக்கியமான போட்டிகளை நடத்தி வந்தது.
தற்போது 2020 ஆம் ஆண்டு wrestlemania 36 வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக அமெரிக்காவும் அதில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.
Wwe அதிக ரசிகர் பட்டாளம் கொண்டது இந்தியா. இதற்கென்று வெறியர்களே உண்டு 90ல் பிறந்தவர்களுக்கு.
அண்டர்டேக்கர், ஜான் சீனா, ரேண்டி ஆர்டன், கிரிஸ் பெனாயிட், ப்ராக் லெஸ்னர், ரெய் மிஸ்டரியோ,
பிக் சோ, ரோமன்.ரைன்ஸ் போன்ற வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள்.
உலகெங்கும் பள்ளிகளில் இவர்களால் மாணவர்கள் அதிக இழப்புகளும் காயங்களையும் சந்தித்தார்கள்.
Wwe இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு THE RAW, SMACKDOWN என்று விளையாடி வருகிறார்கள். புதிதாக wwe NXT என்றற பிரிவில் புதிய வீரர்களும் விளையாடி வருகிறார்கள்.
மாதாமாதம் the raw, smackdown போட்டியில் விளையாடும் வீரர்கள் wwe பெல்ட், வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன், டேக் டீம் சாம்பியன் போன்ற பெல்ட்காக டேபிள் லேடர் சேர், நோ மெர்சி, ஆர்மஜடான், பேக்லாஷ், ராயல் ரம்பிள், சம்மர் ஸ்லாம், சர்வவையர் சீரியஸ் போன்ற மேட்சுகள் நடத்தப்படுகிறது.
இதில் மிகப்பெரிய போட்டியாக wrestlemania போட்டி கருதப்படுகிறது.
Wwe வீரர்கள் wrestlemaina-வில் விளையாடுவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இதில் விளையாடும் அண்டர்டேக்கர், 33 ரெஸில்மேனியா போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் தான் விளையாடிய 33வது ரெஸில்மேனியாவில் தான் ரோமன் ரைம்ஸ் இடம் தோல்வியடைந்தார். அது அவரது wrestlemania வின் முதல் தோல்வி.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த ராயல் ரம்பிள் போட்டிகள் ட்ரூ மெகன்டயர், 30 பேர் கொண்ட போட்டியில் வென்று wrestlemania வில் wwe பெல்ட்காக ப்ராக் லெஸ்னரிடம் மோத உள்ளார்.
ப்ராக் லெஸ்னர்-ஐ வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, ஆகையால் இந்த wrestlemania அதிக அளவிற்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கொரோனா பாதிப்பால் wrestlemaina நடக்குமா என்று ரசிகர்கள் சந்தேகித்தார்.
Wwe வின்ஸ் மெக்மஹான் மகளான wwe முன்னாள் வீராங்கனை தற்போது The RAW உரிமையாளரான ஸ்டெப்னி மெக்மோகன், “ரெஸில்மேனியா திட்டமிட்டபடி இருபிரிவாக பிரிக்கப்பட்டு நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருந்த ரெஸில்மேனியா , கொரோனாவால் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும்” என்றார்.
1986ஆம் ஆண்டுக்கு பிறகு இரு இடங்களில் ரெஸில்மேனியா நடைபெற இருக்கிறது, இதுவே முதல் முறை.
ரசிகர்கள் wrestlemania வை பார்கக உள்ளே அனுமதி கிடையாது. இதுவும் wwe முதல் முறை நடைபெற உள்ளது.
Wwe சந்தா கட்டி பார்க்கும் pay-per-view வில் மக்கள் இந்த wrestlemania-வை காணலாம் என்று அறிவித்துள்ளார்கள்.
உலகின் ஆறாவது மதிப்புள்ள விளையாட்டு என்று ரெஸில்மேனியா விற்கு போர்ப்ஸ் நிறுவனம் மதிப்பளித்து உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மற்றும் ஒர்லான்டோ ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஸ்டெப்னி மெக்மோகன் மேலும் கூறுகையில் “விளையாட்டை விட எங்களுக்கு ரசிகர்களும் மற்றும் எங்களுடைய வீரர்களின் உடல் நலம் மிகவும் முக்கியமானது.
அதனால் வீரர்களை பாதுகாப்பாகவும் ரசிகர் இல்லாமலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று கூறியுள்ளார்
மேலும் சில வாரங்களுக்கு தி ரா மற்றும் ஸ்மாக்டவுன் நடைபெறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்