கொரோனா வைரஸ் காரணமாக பிரதமர் மோடி அறிவித்த படி பல கிரிக்கெட் வீரர்கள் நிதி அளித்து வருகிறார்கள் தற்போது ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கும் நிதி அளித்துள்ளார்
உலகத்தையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பல லட்சம் மக்களை பாதிப்படையச் செய்கிறது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.
பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை.
மோடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உங்களால் முடிந்த நிதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு இருந்தார்.
அதற்கு டாடா குழுமம் 1500 கோடி ,நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், பிசிசிஐ 51 லட்சம், ரகானே 10 லட்சம், ரெய்னா 52 லட்சம்
என பலரும் தங்களது நிதியை நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் விளையாட்டு வீரர்களில் வருடத்திற்கு அதிகம் சம்பாதிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் தான் பிரதம மந்திரி நிதிக்குப் பணம் செலுத்தி விட்டேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் எவ்வளவு கொடுத்தேன் என்ற தொகையை அவர் அறிவிக்கவில்லை. ஆனால் வெளி வட்டாரங்களில் 3 கோடி அளவிற்கு கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
கௌதம் கம்பீர் மருத்துவ உபகரணங்கள் வாங்க 50 லட்சம் நிதி அளித்து இருந்தார்.
நேற்று மோடி அறிவித்த படி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கு அனைத்து வைத்து அகல் விளக்கு மற்றும் டார்ச்லைட் ஏற்றும்படி கூறியிருந்தார்.
இதை கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வீட்டில் மின் விளக்கை அனைத்து அகல் விளக்குகளை ஏற்றினார்கள்.
இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் ஆல்ரவுண்டர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது வீட்டில் அகல்விளக்கு ஏற்றி ஏற்றியதும் இல்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பிரதம மந்திரி நிதிக்கு 50 லட்சம் அளித்து விட்டேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
We are stronger when we stand united.
I will be lighting a candle tonight at 9pm for 9 minutes. Are you with me?
On this great day of solidarity, I pledge Rs. 50 Lakhs to the #PMCaresFunds. Please do your bit too!@narendramodi#9pm9minutes #IndiaFightsCorona
— yuvraj singh (@YUVSTRONG12) April 5, 2020
யுவராஜ் சிங் செய்த இந்த உதவியை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து பாராட்டியும் வருகிறார்கள்.
ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க நினைத்த விளம்பரம் மூலமே பலநூறு கோடிகள் சம்பாதித்த தோனி முகத்தை கூட பார்க்க முடியவில்லை.