Home விளையாட்டு அஷ்வின் மூக்கை உடைத்த பும்ரா; லாக்டவுன் பரிதாபம்

அஷ்வின் மூக்கை உடைத்த பும்ரா; லாக்டவுன் பரிதாபம்

251
0

அஷ்வின் மூக்கை உடைத்த பும்ரா. லாக்டவுன் நேரத்தில் போட்டியில் இல்லை பரிதாபமாக டிவிட்டர்-இன்ஸ்டாவில் ஒருவரை மாற்றி ஒருவர் புகார் சொல்லி விளையாடி வருகின்றனர்.

விராட் கோலி தனது மனைவியுடன் இன்ஸ்டாவில் முழ்கிடக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாவில் மனைவியுடன் வார்த்தை விளையாட்டு விளையாடி வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமான ஐபிஎல் என்ற ஒரு போட்டியையே ரசிகர்கள் மறந்துவிட்டனர். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் கிரிக்கெட் போட்டியையே மறந்துவிடுவார்கள் போல.

குடிமகன்கள் மதுபானத்தையே மறந்துவிட்டனர். இதில் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன? இதனால் ரசிகர்களை ஆக்டிவாக வைக்க வீரர்கள் சோசியல் மீடியா வாயிலாக ஏதாவது ஒரு சர்ச்சை போஸ்ட்யை பதிவு செய்கின்றனர்.

அதில் இன்று சிக்கியது ரவிசந்திரன் அஸ்வின். அஸ்வின் சிஎஸ்கே தன்னை ஓரம் கட்டியதை பற்றி செவிட்டில் அறைந்தது போன்று இருந்தது என்று கூறினார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே பும்ரா அஸ்வின் மூக்கை உடைக்கும் விதமாக டிவிட்டரில் யுவராஜ் சிங் கேட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.

யுவராஜ் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் மூன்று கேள்விகள் கேட்டார்.

  1. சச்சினா? கோலியாக? யார் சிறந்தவர்கள்?
  2. பிடித்த மிடில் ஆர்டர் யுவராஜா, தோனியா?
  3. சிறந்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜனா? அஸ்வினா?

இப்படி மூன்று கேள்விகள் கேட்க, பும்ரா முதல் இரண்டு கேள்விக்கு லாவகமாக பதில் கூறினார். நான் சர்வதேச போட்டிக்கு வந்து 4 வருடம் மட்டுமே ஆகிறது. சச்சின்-கோலி இருவரையும் ஒப்பிடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை எனக் கூறினார்.

இரண்டாவது யுவராஜா? தோனியா? எனக் கேட்டபோது, இருவரில் யார் சிறந்தவர் எனக் கேட்பது பெற்றோரில் அம்மா சிறந்தவரா? அப்பா சிறந்தவரா? எனக் கேட்பது போல் உள்ளது. இருவருமே சிறந்தவர்கள் என்பது தான் என் பதில் எனக் கூறி முடித்தார்.

மூன்றாவது சிறந்த ஸ்பின்னர் யார் எனக் கேட்டதற்கு மட்டும் இருவரும் சிறந்தவர்கள் என பும்ரா கூறவில்லை. அஷ்வினுடன் ஆடியுள்ளேன்! ஹர்பஜனுடன் ஆடவில்லை இதன் அடிப்படையில் ஹர்பஜன் தான் சிறந்தவர் என நான் கூறுவேன் என பதிலளித்தார்.

ரவிச்சந்திர அஸ்வின் வந்த பிறகு ஹர்பஜன் பந்து வீச்சு சரியில்லை என ஓரம் கட்டப்பட்டவர். அதன்பிறகு அஸ்வின் செயல்பாடு யாருக்கும் பிடிக்காமல் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

சிஎஸ்கேவில் கூட அஸ்வினை கழற்றிவிட்டு ஹர்பஜனை சேர்த்துக்கொண்டனர். இந்நிலையில் பும்ராவும் தனக்கு அஸ்வினை பிடிக்காது என சூட்சமாக பதில் கூறி அஸ்வின் மூக்கை உடைத்து உள்ளார்.

இன்னும் சில மாதங்கள் ஊரடங்கு நீடித்தால் ட்விட்டர், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் குழாயடி சண்டை களமாக மாறிவிடும் போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here