சில்லு கருப்பட்டி திரைவிமர்சனம். உரையாடல் என்பது வெறுமனே பேசிக்கொள்வது, பேசுவதை கேட்பது என்றல்லாமல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நம் உணர்வுகளை கம்யூனிக்கேட் செய்யும் விதமாக இருத்தல் என்பது மிக முக்கியம்.
அதுவும் இக்காலத்தில் பெறும்பாலான மக்களிடம் அப்படியொரு உரையாடல் நிகழ்வதே இல்லை. மொபைல், வாட்ஸப், ஃபேஸ்புக், டிவிட்டர் என கம்யூனிக்கேட் செய்ய செயலிகள் இருந்தும் இங்கு பலர் தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள்.
உணர்வுகளை கடத்தும் விதமான உரையாடல்களை அசைவுகளை அன்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு நான்கு கதைகளில் சொல்லிருக்கிறார் இயக்குனர் ஹலிதா அவர்கள். அதில் ஒரு கதைதான் காக்கா கடி.