போலி என்கவுண்டர்: சிக்குவாரா நரேந்திர மோடி? உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி.
2002 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் 22 என்கவுண்டர்கள் நடந்தது. இதில் ஒரு சமுதாய மக்கள் கொல்லப்பட்டனர். அனைவரும் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காரணம் கூறப்பட்டது.
அக்காலகட்டத்தில், குஜராத்தின் பிரதமராக பதவி வகித்தவர் நரேந்திர மோடி. போலி என்கவுண்டர் செய்யப்பட்ட 22 பேரில், பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அப்பாவிகள் எனவும், அரசியல் லாபத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவ்வழக்கை, 2007-ல் பி.ஜி.வர்கீஸ் மற்றும் ஜாவித் அக்தர் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தனர். 2012-ல் முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையில், தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அந்தக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் இந்த வழக்கால் மோடிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், மோடி பிரதமராக பதவி வகிக்கும்போது, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது பலரால் பாராட்டப்பட்டுள்ளது.