விஸ்வாசம் ரிலீஸ்: முதியவரைத் தாக்கிய அஜித் கைது!
விஸ்வாசம், பேட்ட நள்ளிரவு முதலே திரையிடப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை நடந்த அசம்பாவிதங்கள் ஒரு பார்வை.
காத்து வாங்குகிறது பேட்ட
பேட்ட திரைப்படம் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கூட்டம் காணப்படுகிறது. மற்ற திரையரங்குகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்துள்ளனர்.
விஸ்வாசம் கூட்டத்தை ஒப்பிட்டால் பேட்டயின் கூட்டம் பாதி தான்…
ரஜினி ரசிகர் திருமணம்
பேட்ட படம் ரிலீஸ் ஆன தியேட்டரிலே ரசிகர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ராயப்பேட்டை தியேட்டரில் உட்லாண்ட்ஸ் தியேட்டரில் பலூன்களைப் பறக்கவிட்டு மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டி ஜோடியாக படம் பார்த்துள்ளார்.
அஜித் ரசிகர் அஜித் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கீழச்சூர் திரையரங்கில் விஸ்வாசம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
அங்கு ஏராளமான ரசிகர்கள் நள்ளிரவே குவிந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் அஜித், படத்தைப் பார்க்க ஆர்வமுடன் கிளம்பியுள்ளார்.
தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். அஜித் என பெயர் வைக்கத் தெரியும் பணம் தர மாட்டியா என பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் பாண்டியனின் அலறல் சத்தம்கேட்டு, அவரைக் காப்பாற்றியுள்ளனர். வயதில் முதியவர் என்று கூட பாராமல் முதியவரைத் தாக்கியதால் போலீசார் அஜித்தை கைது செய்தனர்.
பேனர் கிழிப்பு
விஸ்வாசம் படத்தை முதலில் திரையிடாமல் பேட்ட படத்தை திரையிட்டதற்காக அஜித் ரசிகர்கள் ரோகினி தியேட்டரில் பேட்ட படத்தின் பேனரை கிழித்துள்ளனர்.
பேனர் கவிழ்ந்தது
அநேக தியேட்டரில் அஜித் கட்டவுட் மற்றும் பால் ஊற்ற மேலே ஏறியதில் பேனர் மற்றும் சாரங்கள் சரிந்துள்ளன.
போக்குவரத்து நெரிசல்
விஸ்வாசம் படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்கள் அருகில் உள்ள சாலைகளில் கூட்ட நெரிசல். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
1 கோடி ரூபாய் டிக்கெட்
பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில தொலைக்காட்சியில், ஒரு கோடி டிக்கெட் விலை என்றாலும் நாங்கள் வாங்கிப் பார்ப்போம் எனப் பேட்டி கொடுத்துள்ளனர்.
அஜித் படம் வெளியாவதே ஒரு திருவிழா. திருவிழா நேரத்தில் வெளியானால் சம்பவம் இல்லாமல் இருக்குமா? தர தப்பட்டை கிழியுது ஒவ்வொரு திரையரங்கிலும்..
எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய கிளிக் செய்யவும்