அம்பானியின் அடுத்த திட்டம்: ஏசி, ப்ரிட்ஜ் 1 ரூபாய்!
அம்பானியின் அடுத்த டார்கெட் அமேசான் மற்றும் பிளிப்கார்டு நிறுவனங்களை ஓரம் கட்டுவதே.
முகேஷ் அம்பானி, ஜியோ என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை துவங்கி பல செல்போன் நிறுவனங்களை நஷ்டமடையச் செய்தார். தற்பொழுது புதிய திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.
வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கும் ஜியோ ப்ரீபெய்ட் சேவையில் 28 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் உள்ளனர்.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் 10000 ரீட்டெய்ல் கடைகள் உள்ளது.
புதிய திட்டம்
ரிலையன்ஸ் மற்றும் ஜியோ சேவைகளை ஒன்றிணைத்து கூடிய விரைவில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கப்போவதாக அம்பானி தெரிவித்துள்ளார்.
மற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ரீட்டெய்ல் கடைகள் எதுவும் கொண்டிருக்கவில்லை.
ரிலையன்ஸ் ட்ரெண்ட் என்ற வர்த்தக நிறுவனம் ஏற்கனவே முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக உள்ளது.
அதனை ஆன்லைன் மயமாக்கலால் மேலும் அசுர வளர்ச்சியடைய முடியும் என வர்த்தகத்துறையினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் மட்டும் 50 லட்சம் ரீட்டெய்ல் கடைகள் உள்ளது. அவற்றை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்ல இது ஒரு சிறந்த வழி என அம்பானி தெரிவித்துள்ளார்.
இலவச அறிவிப்பு உண்டா?
அம்பானி முதன்முதலில் 501 ரூபாய்க்கு இரண்டு மொபைல் வழங்கினார். முகேஷ் அம்பானி, ஜியோ மூலம் ஆறு மாதம், ஒரு வருடம் என இலவசமாக சேவையை வழங்கினார் .
அதுமட்டுமல்லாமல், டிடிஎச், ஜியோ பைபர் இன்டர்நெட் சேவைகளும் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
AJIO என்ற இணையதளம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இதை அனைவருக்கும் பிரபலப்படுத்த இலவச அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு உள்ளதாம்.
ஆன்லைன் ஷாப்பிங் மூலம், வீட்டு உபயோகப்பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை 1 ரூபாய்க்கு அல்லது குறைந்த பணத்தில் ஆஃப்பர்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.