சபரிமலைக்குள் பெண்கள்; போலீஸ் துப்பாக்கி சூடு
ஆங்கில வருடப் பிறப்பான நேற்று, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை பெண்கள், “சுவர் போராட்டம்” நடத்தினர். மொத்தம் 620 கிலோமீட்டர் தூரம், மனிதச்சங்கிலி போல் பெண்கள் வரிசைக்கட்டி நின்றனர்.
இப்போராட்டத்திற்கும், சபரிமலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்; பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தியுள்ளனர் எனவும் கேரள அரசு தெரிவித்தது.
ஆனால், இப்போராட்டம் முழுக்கமுழுக்க கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடைபெற்றது.
காசர்கோடு பகுதியில், போராட்டம் நடைபெற்ற இடத்தில், ஆர்.எஸ்.எஸ். வன்முறையில் ஈடுபட்டுள்ளது. முதலில், ரயில் தண்டவாளம் அருகிலிருந்த காய்ந்த புல்லிற்குத் தீவைத்துள்ளனர்.
பின்னர், பெண்கள் சுவரை நோக்கி கற்களையும் பாட்டில்களையும் வீசியுள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே நீண்டநேரம் போராட்டம் நீடித்துள்ளது. இதனால், வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார், 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில், 4 கம்யூனிஸ்ட் பெண்கள், ஒரு ஆர்.எஸ்.எஸ். நபர் கயமடைந்துள்ளார். கயமடைந்தவர்கள், மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இப்பரபரப்பு அடங்குவதற்குள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், இரண்டு பெண்கள் உள்ளே நுழைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இவர்கள் சிலதினங்களுக்குமுன், ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயற்சித்தவர்கள். ஐய்யப்ப பக்தர்கள் விரட்டியதால், அப்போது கோவிலுக்குள் நுழையமுடியவில்லை.
இன்று அதிகாலை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. நுழைவாயில் வழியாக, இருமுடியுடன் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசிக்கவில்லை.
இத்தொடர் சம்பவத்தால், கேரளா முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது.
எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.