Home Latest News Tamil கனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு!

கனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு!

352
0
கனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு

கனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு!

கனகதுர்காவும், பிந்துவும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்.

சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பில் இருந்துவிட்டு சமீபத்தில் வீடு திரும்பினார்கள். வீடு திரும்பியவுடன் கனகதுர்காவை மாமியார் உருட்டுக்கட்டையால் அடித்துவிட்டார் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மலப்புரம், பெரிந்தலமன்னாவிலுள்ள அவருடைய கணவர் வீட்டில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதன்பிறகு மாமியார் சுமதியம்மா மீது கனகதுர்கா போலீசில், 12 முறை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் பிந்துவும், கனகதுர்காவும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம், 24 மணி நேர பாதுகாப்பு வழங்க கேரள அரசையும் காவல்துறையையும் வலியுறுத்தி உள்ளது.

அதேபோல், கனக துர்காவின் மாமியாரும் தான் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனகதுர்காவை நான் தாக்கவில்லை அவர் தான் என்னைத் தாக்கினார் எனப் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஎச்.ஐ.வி. ரத்தம்: கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது!
Next articleகுடும்பத்துடன் மாயமானார் நடிகர் அஜித்! – பரம ரகசியம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here