பொங்கலுக்கு எத்தனை நாள் அரசு விடுமுறை? ஒரு நாள் லீவ் விட மாட்டீங்களோ?
தைப்பொங்கல் ஜனவரி 15-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 16-ல் மாட்டுப்பொங்கல், 17-ல் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
செவ்வாய், புதன், வியாழன்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை நாளாக அரசுக் குறிப்பீட்டில் இருந்தது.
அதேவேளை, பொங்கலுக்கு முந்தைய 12, 13 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இடையில் 14-ம் தேதி மட்டுமே வேலைநாள்.
இந்த ஒருநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் 6 நாட்கள் விடுமுறையாகிவிடும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகஅரசு 14-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்துவிட்டது.
வெளியூர்களில் இருந்து நீண்ட நாட்கள் விடுமுறையுடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடவேண்டி இந்த விடுமுறையை வழங்கியுள்ளது.
இந்த ஒருநாள் விடுமுறையை பிப்ரவரி 9-ம் தேதி சனிக்கிழமை அரசு வேலைநாளாக அறிவித்துள்ளது.
எனவே வெளியூரில் இருக்கும் அரசு ஊழியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை மாலையே ஊருக்குச்செல்லத் தயாராகலாம்.