வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா: மூன்றுக்கும் முடிச்சிப்போட மார்க் திட்டம்
இந்த மூன்றும் இல்லாமல் ஒரு ஸ்மார்ட் போன் இல்லை. இதில் ஒன்றையாவது உபயோகிக்காமல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களால் இருக்க முடியாது.
இந்த மூன்றையுமே ஒரே நிறுவனம் தான் வைத்துள்ளது. பேஸ்புக் நிறுவனமே இந்த மூன்று செயலியின் தற்போதைய ஓனர்.
ஆனால், இவை மூன்றும் வேறு வேறு பெயர்களில் உள்ளது. ஒரே பயனர்கள் இந்த மூன்றையும் தனி தனி ஆப்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ்ஆப்பில் இல்லாதவரை தொடர்பு கொள்ள முகநூல் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முகநூலில் இல்லாதவரை தொடர்புகொள்ள வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
தற்பொழுது முகநூல் பக்கங்களில் இன்ஸ்டாகிராம் மெஸ்சேஜ் இடம் பெற்று வருகிறது. விரைவில் வாட்ஸ்ஆப் மெஸ்சேஜ்களை பேஸ்புக்கிலேயே பார்க்க முடியும்.
பேஸ்புக்கில் இருந்துகொண்டே வாட்ஸ்ஆப்பிற்கு செய்தி அனுப்பமுடியும். இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த வசதி செயல்பாட்டுக்கு வர உள்ளது.
தற்பொழுது வாட்ஸ்ஆப்பில் யூசர் நேம் போன்ற வசதிகள் கிடையாது. இவற்றையெல்லாம் சரிகட்ட விரைவில் அடுத்தடுத்த அசரவைக்கும் அப்டேட்டுகள் வர உள்ளதாம்.