இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பையில் மோதக்கூடாது – சிசிஐ
புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடே கடும் சோகத்திலும் கொந்தளிப்பிலும் இருக்கிறது.
இந்த நிலைமையில் இது நடப்பதற்கு உடந்தையாக இருந்த பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியக் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று மும்பையில் இருக்கும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா பிசிசிஐயை வலியுறுத்துகிறது.
இதைத் தொடர்ந்து கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின் செயலாளர் சுரேஷ் பாஃப்னா நிருபர்களிடம் கூறுகையில்,
புல்வாமாவில் நமது ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். சிசிஐ அமைப்பு விளையாட்டோடு தொடர்புடையதாக இருந்தாலும், தேசத்திற்கே முதலிடம், அதன்பின்பே விளையாட்டு.
பாகிஸ்தான் பிரதமர் இந்த நிகழ்வைப் பற்றி வாயைத் திறக்காமல் இருப்பது மேலும் இந்தியர்களை ஆத்திரமூட்டுகிறது. அவர் எதையோ மூடி மறைப்பது போல் தெரிகிறது.
உலகக்கோப்பைப் போட்டியில் வரும் மே 30ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16-ம் தேதி ஓல்டு டிராபோர்ட் நகரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது.