காஷ்மீர் இந்தியாவுக்கே: போருக்குத் தயாராகிவிட்டார் மோடி!
புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதியை பாகிஸ்தான் ஊடகங்கள், போராட்ட வீரன் எனப் பாராட்டியுள்ளது.
மும்பையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் ரயில் மறியலில் ஈட்டுபட்டு அதிருப்தியை வெளியிட்டனர்.
பிரதமர் மோடி இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் (John Bolton) தீவிரவாதிகளை ஒழிக்க தேவையான உதவிகளைச் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ராணுவ மேஜர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதே போன்று ஈரானில் சில நாட்களுக்குமுன் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானே காரணம் என அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.
இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே, விரைவில் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.