எம்மண்ணிலும், எச்சூழலிலும் இந்தியா சிம்ம சொப்பனமாக விளங்கும் – சச்சின்
இந்தியக் கிரிக்கெட் அணி எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த சூழ்நிலையில் விளையாடினாலும் எதிரணிகளுக்கு மிகவும் சவாலாக (சிம்ம சொப்பனமாக) இருக்கும் என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, விராட் கோலி தலைமையில் கடந்த மூன்று தொடர்களை அந்நிய மண்ணில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இதுவரை இருந்த இந்தியக் கிரிக்கெட் அணியில் விராட் கோலி தலைமையிலான இந்தியஅணி மிகவும் வலுவான அணியாகும்.
வருகின்ற உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி மட்டுமே அதிக சவாலாக இருக்கும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.
வார்னர் சுமித் அணிக்கு திரும்புதல்
வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி வார்னர் மற்றும் சுமித் ஆஸ்திரேலியா அணிக்குத் திரும்புவதால், அவ்வணி மேலும் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.
சிறந்த தலைமையும் முன்னாள் பவுலர்களும் அணிக்குத் திரும்புவதால் வழக்கம் போல் ஆஸ்திரேலியா வலுவான அணியாக மாறிவிடும்.
ஒருநாள் போட்டியில் ஒன்றிரண்டு மணி நேரங்கள் ஆட்டத்தை சொதப்பினால் முழு ஆட்டமும் நாம் கையைவிட்டு நழுவி விடும்.
இந்தியா விளையாட்டில் நாளுக்கு நாள் அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக பெண்கள், விளையாட்டில் அதிகமாக பங்கேற்று பதக்கங்களை வென்று குவிக்கின்றனர்.
இதற்கு ஹீமா தாஸ், சுவாப்ன பார்மன் ஆகிய ஆசியன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை எடுத்துக்காட்டாக கூறினார்.