சிபிஐயா? போலீசா?; மோடியா? லேடியா? – கெல்கத்தா களோபரம்
கொல்கத்தா கமிஷனர் ராஜிவ்குமாரை திரோஸ் வேலி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய சிபிஐ முயன்றது.
ஆனால் அதற்குள் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கமிஷனர் உத்தரவின் பேரில் கொல்கத்தா போலீஸ் கைது செய்துவிட்டனர்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய போலீசார் மும்முரமாகினர்.
இவை அனைத்தும் அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜியின் சம்மதத்துடன் நடந்துள்ளது.
இந்த அசாதாரண சூழலில் சிபிஐ அதிகாரிகளை காக்க மத்திய அரசு, மேற்கு வங்கம் முழுவதும் உள்ள சிபிஐ அலுவலங்களில் மத்திய ரிசர்வ் போலீசாரை குவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களிலும் சிஆர்பிஎஃப் படை குவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் vs சிபிஐ என்று இருந்த பிரச்சனை ‘லேடி vs மோடி’ என மாறிவிட்டது.
மத்திய அரசின் பவரும், மாநில அரசின் பவரும் மேற்குவங்க மாநிலத்தையே களோபரமாக மாற்றிவிட்டது.
மாநில அரசை கலைக்க மத்திய அரசு முயன்று வருவதாக மம்தா பேனர்ஜி குற்றம் சுமத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.