புல்வாமா தாக்குதல்: உண்மையான வீடியோ வெளியானது
உண்மையான வீடியோவா?
புல்வாமா தாக்குதல் சிசிடிவி வீடியோ என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் அது புல்வாமா தாக்குதல் வீடியோ இல்லை.
அந்த வீடியோவை நன்கு உற்றுக்கவனித்தாலே தெரியும், அது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்று.
இந்தியாவில் வாகனம் வலது ஓரமாகச் செல்லும். ஆனால் இந்த வீடியோவில் வாகனங்கள் இடது ஓரமாகச் செல்கிறது.
அதாவது இந்த வீடியோவில் வலதுபுறம் வாகனம் செல்கிறது. இடதுபுறம் வாகனம் வருகிறது. இந்தியாவில் இடதுபுறமே வாகனம் செல்லும்.
அது ஈராக் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வு. ஆனால் புல்வாமா தாக்குதலும் கிட்டத்தட்ட இப்படி ஒரு நிகழ்வே.
இன்டர்நெட் சேவை முடக்கம்
இந்த தாக்குதல் பற்றி எந்த ஒரு வீடியோவும் இதுவரை கிடைக்கவில்லை. வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகக்கூடாது என தாக்குதல் நடந்த பகுதியில் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது.
மீடியாக்களுக்கு தெரியும் முன்பே அப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.
தீவிரவாதிக்கு எப்படி தெரியும்?
சி.ஆர்.பி.எப். வாகனம் சரியாக அந்த நேரத்தில் அங்கு வரும் என்பது தீவிரவாதிக்கு எப்படி தெரியும்?
இப்பயணம் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குள் முடிவு செய்த ஒன்றாகவே இருக்க முடியும்.
350 கிலோ வெடி மருந்தை இந்தியப் பாதுகாப்பு பகுதிக்குள் கொண்டு வந்தது எப்படி? காஷ்மீர் என்பது முழுக்க முழுக்க ஆபத்தான பகுதி.
எப்பொழுதுமே ராணுவ கண்காணிப்பில் இருக்கும் பகுதி. இப்படி ஒரு பகுதியில் 350 கிலோ வெடி மருந்துடன் செல்வது என்பது அதிர்ச்சியான ஒன்று.
அதுவும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வரும் நேரத்தில் மிகச்சரியாக வெடிக்க வைத்திருப்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ராணுவத்திற்குள் கருப்பு ஆடு உள்ளதா?
ராணுவத்திற்குள் உள்ள ஒரு நபர் துப்புக்கொடுக்காமல் இப்படி ஒரு தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்த வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.
இறந்தவர்களை அடக்கம் செய்வது, அவர்கள் குடும்பத்திற்கு உதவுவது, வீர வணக்கம் செலுத்துவது இப்படியே இரண்டு நாட்களைக் கழித்துவிட்டோம்.
இது இதோடு முடிந்துவிடுமா? நாளை மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் வெடிமருந்துடன் வாகனம் வருவதை கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்படாமல் ராணுவ வீரர்கள் வாகனம் உள்ளது என்பது வேதனையான ஒன்று.