Home நிகழ்வுகள் தமிழகம் பள்ளியின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல்!

பள்ளியின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல்!

361
0
பள்ளியின் பூட்டை

பள்ளியின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல்!

விருதுநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து 3 கணிப்பொறி, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ 5000 பணத்தையும் திருடிச்சென்று விட்டனர்.

பள்ளி வளாகத்தில் நின்று இருந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர் அந்த மர்ம நபர்கள்.

இன்று காலையில் வழக்கம்போல் பள்ளி திறப்பதற்காக வந்த ஆசிரியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

உடனே விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஅதிமுகவுடன் பாமக கூட்டணியா? நாளை அதிரடி அறிவிப்பு
Next articleஇதுல யாரு ஒரிஜினல் பிரியங்கா சோப்ரா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here